Main Menu

அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் வைத்தியத்துறையினருக்கு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பாராட்டு

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்திய உதவியாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதர்கள், மருந்தாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள், சிற்றுழியர்கள், வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கனேசலிங்கம் மற்றும் நிருவாகத்தினரின் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க தியாக சிந்தனை, கருணைமிக்க பணியினை மனதாரப்பாராட்டுவதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்பினரும் அதன் போசகருமான மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வைத்தியசாலை பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் தங்களின் குடும்பம், குழந்தைகளை மறந்து 24 மணித்தியாலமும் விடுதிகளில் தங்கியிருந்து தங்கள் பணியினை ஆற்றி வருகின்றனர். உணவுத்தேவைக்குக்கூட வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களாகவுள்ளனர்.

பணிப்பாளரின் சிறப்பான செயற்பாட்டினால் அவர்களுக்குன உணவு விடுதில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றமைக்கும், புனர்வாழ்வு மத்திய நிலைத்தினுடாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பு உணவுக்குத்தேவையான உதவியை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ள சிவில் அமைப்பின் உறுப்பினர் எஸ்.மாமாங்கராஜா அவர்களுக்கும் நன்றிகள்.

அத்தோடு, நமது மக்களுக்கு முகக்கவசங்களைப் பாவிக்கும்படியாக சுகாதாரத்தரப்பினர் பணிக்கின்ற போதும், அதனை சில மணி நேரம் கூட அணிவதற்குத் தயாரில்லாத போது, இந்த அரப்பணிப்புமிக்க வைத்திய சேவையினை வழங்கி வருகின்ற வைத்தியர்களும் தாதியர்களும் பாதுகாப்பு அங்கியினைத் தொடர்ந்து 12 மணித்தியாலமாக அணிந்து கொண்டு தங்களின் கண்ணியமான பணியினை தங்கள் உயிரையும் மதிக்காது சேவையாற்றுவது மதிக்கப்பட வேண்டுமென மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் புகழ்து பாராட்டியுள்ளார்.



Comments are Closed