Main Menu

கொரோனா தடுப்பு தொடர்பில் சலீமினால் விசேட செயலணி உருவாக்கம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எஸ்.அஷ்ரப்கான்)
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் உதவுவதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிகச்செயலாளர் மற்றும் தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீமினால் அவரது ஆதரவாளர்களைக்கொண்டு விசேட செயலணி அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தகவல்களை வழங்குதல், விழிப்புணர்வூட்டுதல், உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல், அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் நலன்புரி நிவாரண சேவைகள் தொடர்பில் கவனமெடுக்கவும் இச்செயலணி அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, வேட்பாளர் சலீமினால் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பு செயலணிக்கு டாக்டர் சனூஸ் காரியப்பர் தம்மாலான உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

காய்ச்சல், இருமல் தொடர்பில் மருத்துவ ரீதியாக ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில் மக்கள் தொலைபேசியூடாக டாக்டர் சனூஸ் அவர்களை பின்வரும் தொலைபேசி (0772516192) இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இவ்வூரடங்கு காலப்பகுதியில் ஆலோசனைகளைப்பெற முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed