Main Menu

மட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்!

எம்.ரீ.எம்.பாரிஸ்

மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சையளித்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பலத்த எதிர்ப்புக்கிளம்பியது. அதனால் அதன் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

ரிதிதென்ன பெட்டிகலோ கெம்பஸில்
தங்க வைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இல -03 Of 1897 அரசியலமைப்புச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் இதனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இச்சிகிச்சை நிலையத்தை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

Batticaloa Cumpus நிர்வாகம் இதற்கு பலமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் தமக்குச் சொந்தமான இடத்தில் ஒரு அத்துமீறலாக இதனை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமை இங்கு ஏற்பட்டால்
மட்டக்களப்பு மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும் என்பதில் ஐயமில்லை.

ரிதிதென்னை, ஜெயந்தியாய மக்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் இருப்பதாக
அங்குள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா சுற்றுச்சூழலிலும் தாக்கத்தை உண்டு பண்ணலாமென்ற அச்ச நிலைமை தோன்றியுள்ளது.



Comments are Closed