Main Menu

புணானை, கந்தகாடு கொரோனா தடுப்பு முகாம்களிலிருந்தோர் விடுவிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
புணானை மற்றும் கந்தகாடு கொரோனா தடுப்பு முகாம்களில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றுமில்லாத நிலை தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று (24.03.2020) இடம்பெற்றது.

இராணுவத்தினரின் பஸ் மூலமாக புணானை முகாமிலிருந்து மாத்தறை பகுதிக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 80 பேரும் கொழும்புக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 125 பேரும் கண்டிக்கு ஒரு பஸ் மூலமாக 33 பேரும் இன்று காலை 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.

கந்தக்காடு பகுதியிலிருந்து 108 பேர் இராணுவத்தினரால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.



Comments are Closed