Main Menu

ஓட்டமாவடியில் நடமாடும் வியாபாரிகளுக்கு அனுமதி – பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
நாட்டில் வேகமாகப்பரவி வரும் கொரோனா நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்வு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாதென்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய ஊரடங்குச்சட்டத்தின் போது நடமாடும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள மரக்கறி, மீன் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வியாபாரிளுக்கு அனுமதி வழங்கும் நிகழ்வு இன்று 24.03.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூதினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறுபது பேருக்கு இன்றைய தினம் குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.



Comments are Closed