Main Menu

வாழைச்சேனைப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுப்பு

மக்கள் அதிகமாகக்கூடும் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி இரசாயனத்திரவம் விசிறும் பணி கோறளைப்பற்று பிரதேச சபைத்தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்தின் வழிகாட்டலில் பிரதேச சபை ஊழியர்களால் இன்று 24.03.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி  பிரதேச செயலகப்பிரிவுகளில் சுகாதார வைத்தியப்பரிசோதகர்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம், பஸ் தரிப்பிடம், ஆலயங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், ATM இயந்திரங்களுள்ள இடங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மியின் ஆலோசனையின் பேரில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சாந்தி முதல் மாவடிச்சேனை பிரதான வீதி, எம்பிசீஎஸ் வீதி, செம்மண்ணோடை, கறுவாக்கேணி பிரதேசத்திலுள்ள சதோஷா விற்பனை நிலையம், வியாபார  நிலையங்கள், பள்ளிவாயல்கள், மதரஸாக்கள், பொது நிறுவங்கள், பாடசாலைகள் மக்கள் கூடிக்கலையும் பொதுவான  இடங்களிலும் வாகனங்கள் போன்றவற்றில் தொற்று நீக்கி விசிறும் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இப்பணிகளில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன, பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி, நிதி முகாமையாளர், வருமான வரிப்பரிசோதகர், பிரதேச சப உறுப்பினர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed