Main Menu

பிரதேச சபையின் ஆலோசனைகளை அமுல்படுத்த ஒத்துழைப்புத்தாருங்கள் – பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி வேண்டுகோள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

அதி வேகமாகப்பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது பொது மக்களின் நன்மைகருதி கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபையினால் முன்மொழியப்பட்டுள்ள ஆலோசனைக் கட்டாயம் கடைப்பிடித்து ஒத்துழைப்புத்தாருமாறு கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் கேட்டுக்கொண்டுள்ளதாவது,

இன்று 25.03.2020ம் திகதி புதன்கிழமை தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் தலைமையில் இடம்பெற்ற பிரதேச சபையின் விஷேட அமர்வில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது பொது மக்களும் வியாபாரிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கும் நோக்கில் சபை பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

குறித்த தீர்மானங்கள் எமது மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சகல தரப்பினரும் கவனத்திற்கொண்டு அதனை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரது கடப்பாடாகும்.

இதன் மூலமே நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதோடு, ஏனையோரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

அந்த வகையில், சபையினால் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதனை மீறிச்செயற்படுவோருக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கைது செய்யப்படும் துர்ப்பாக்கிய நிலையும் உருவாகலாம்.

எனவே, அறிவுறுத்தல்களை பின்பற்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபடுவோம் என பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விஷேட கலந்துலையாடலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவின் பிரதிநிதியாக உப பொலிஸ் பரிசோதகர் அப்துல் றஷாக், பிரதேச சபை உறுப்பினர்களான கே.எல்.அஸ்மி, எம்.ஐ.இம்தியாஸ், பீதாம்பரம் ஆகியோரும் வாழைச்சேனை தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கத்தினர், பொதுச்சுகாதாரப்பரிசோதகர் ஏ.எல்.எம்.நஸீர், வருமான வரி உத்தியோகத்தர் எம்.எம்.ஜெஸ்லின், நிருவாக உத்தியோகத்தர்கல்ள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed