Main Menu

பொருட்கொள்வனவு நடவடிக்கைகள் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் – ஓட்டமாவடி பிரதேச சபை

இந்த செய்தியைப் பகிர்க >>>

மக்களின் பாதுகாப்பு கருதி அத்தியவசியப் பொருட்கொள்வனவு நடவடிக்கைகள் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை விடுக்கும் முக்கிய அறித்தல்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச்சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த நேரத்திற்குள் முண்டியடித்து பொருட்கொள்வனவு செய்யும் போது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகமாக இருப்பதை அவதானித்து, பாதுகாப்புத்தரப்பினரும் சுகாதாரப்பிரிவும் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளதோடு, இவ்வாறான நிலமை நாளையும் காணப்படின் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவித்துள்ளது.

எனவே,

01. ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை சந்தை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் சன நெரிசலைக்குறைத்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக மரக்கறி, தேங்காய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் நிரந்தர, தற்காலிக கடைகள் மற்றும் நடமாடும் வியாபாரம் அனைத்தும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

02. மரக்கறி தவிர்ந்த மீன், இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்தும் தற்போது விற்பனை செய்யும் இடத்திலேயே விற்பனை செய்தல் வேண்டும்.

03. பொருள் விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளும் மற்றும் பொது மக்களும் கையுறை, முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம்.

04. கொள்வனவு நடவடிக்கைக்காக குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் கடைகளுக்குச்செல்தல் வேண்டும்.

05. வியாபார நடவடிக்கைகளின் போது ஒவ்வொரு தனி நபர்களுக்கிடையிலும் 1 மீற்றருக்கு குறையாத இடைவெளி பேணுதல் வேண்டும்.

06. அத்தியாவசிய பொருட்களின் விலை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீற முடியாது.

07. வாகனங்கள், சைக்கிள்கள் என்பன புகையிரத வீதிக்கருகிலுள்ள தரிப்பிடத்திலும், மைதானத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலும் நிறுத்துதல் வேண்டும்.

இவ்வறிவித்தலை மீறிச்செயற்படும் வியாபாரிகள், பொது மக்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதை கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed