Main Menu

போதை வியாபாரிகள், போதைப் பாவனையாளர்களால் கொரோனா விரைவாகப்பரவலாம் : மக்கள் அச்சம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஓட்டமாவடி செய்தியாளர் சதீக் சலாம்

நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலாகி மக்களை வீடுகளிலிருந்து கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதனையிட்டு மக்கள் அரசாங்கத்தை பாரட்டி  வரும் இச்சந்தர்ப்பத்தில், போதை வியாபாரிகளின் கெடுபிடிகளும் போதைப்பாவிப்பவர்களின் வன்முறையும் இக்கொரனா கோவிட் 19 வைரஸை விரைவாகப் பரப்பு வாய்ப்புள்ளது என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது

மக்கள் அத்தியாவசியப்பபொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்வதற்காகவும் ஊரடங்கு சட்டத்தை நீக்குகின்றது அரசாங்கம்.

இச்சந்தர்ப்பத்தை இப்போதை வியாபாரிகள் பயன்படுத்தி வெளியூர்களுக்குச்சென்று தமது போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்து, உள் வீதிகளுக்கூடாகக் கொண்டு வருவதாகவும், அத்துடன், இவர்கள் ஊரடங்கு அமுல்படுத்தும் போது உள்வீதிகளைப் பயன்படுத்தி கிராமப்புறங்களுக்கு போதைப்பொருட்களைக் கடத்துவதாகவும் தமது சைக்கிள், மோட்டர் சைக்கிள்களைக் கலைத்து வைத்து விட்டு சில வீடுகளில் ஒன்று கூடுவதாகவும், அங்கு போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விட்டு கலைந்து செல்வதாகவும், இவர்களில் தற்சமயம் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் வாழும் குடும்பங்கள் மற்றும் அக்குடும்பங்களின் சூழல் போன்றன செல்லும் இடங்களெல்லாம் பரவும் அபாயம் மிகவும் கூடுதலாகவுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மாஞ்சோலை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, நாவலடி, சூடுபத்தினசேனை போன்ற பிரதேசங்களில் வேறு பிரதேசங்களில் உள்ள போதை வியாபாரிகள் வருவதாகவும் மற்றும் இப்போதை வியாபாரிகளின் மற்றும் போதைப்பாவனையாளர்களின் நடமாட்டம் ஊரடங்கு அமுலிலுள்ள போது, கூடுதலாக இருப்பதாக அப்பிரதேசவாசிகள் மிகவும் கவலையடைகின்றனர்.

இவர்களுக்குரிய போதைப்பொருள் கிடைக்காத விடத்து வீட்டுள்ளவர்களுடன் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் வீட்டிலுள்ளவர்கள் வெளியே சொல்ல முடியாமல் தயங்குவதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

ஊடரங்கு அமுலிலுள்ள போது ரோந்துப் பணிகளில் ஈடுபடும் பொலிஸாரை இலக்கு வைத்து தண்ணீர், ஒயில், முட்டைகளால் தாக்கி விட்டுத் தப்பிச்சென்று விடுகின்றனர் என்றும், இதன் பின்னர் அவ்வீதிகளால் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வருகின்ற அப்பாவிகள் இப்பொலிசாரினால் கைது செய்யப்படுவதாகாவும் சமூக வலயத்தளங்களில் பொது மக்களின் கருத்துகளைக்காண முடிகின்றது.

நாட்டில் மதுப்பாவிப்பவர்களுக்கு கொரனா விரைவாகத் தாக்கலாம் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீக்கப்படும் போதும் கூட மதுக்கடைகள் திறக்க முடியாது.

போதைப்பாவனையாளர்கள் அவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்படும் எனவே, இவர்களில் கொரனா போன்ற தொற்று விரைவாகத் தாக்கலாம் என பொதுமக்கள் பயப்படுகின்றனர்.

எனவே, இப்போதை வியாபாரிகளைச் சட்டத்தின் முன் கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர்களுக்கான நீதிமன்றில் பிணை வழங்காது, மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் போதைப்பாவனையாளர்களைக் கைது செய்து அவர்களைப் புனர்வாழ்வு முகாம்களுக்கு உடனடியாக அனுப்ப முப்படையினரும் பொலிசாரும் மிகவும் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed