Main Menu

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கை கழுவும் திரவ இயந்திரம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அரச திணைக்களங்கள் தோறும் கை கழுவும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு கட்டாரில் வாழும் ஏறாவூர் மக்களின் கட்டார் சமூக சேவைகள் அமைப்பு மூலம் கை கழுவும் திரவ இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு சேவை பெறும் நோக்கில் வரும் மக்கள் மற்றும் செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கருதி கை கழுவும் திரவ இயந்திரம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பிற்பாடு செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் கைகளைக்கழுவி தங்களது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed