Main Menu

பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு வர்த்தகரின் உதவி மூலம் உலருணவு வினியோகம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகவுள்ளது.

இதனைக்கருத்திற்கொண்டு கொழும்பைச்சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தகர் ஒருவர் உலருணவு வினியோகத்திற்கென சுமார் 1,70,000 ரூபாவினை வழங்கியுள்ளார்.

குறித்த நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட அரிசி, பருப்பு, நெத்தலி, வெங்காயம், தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலருணவுப்பொதிகள் மிகவும் பின் தங்கிய மீராவோடை, நாவலடி, கேணி நகர் போன்ற பிரதேசங்களுக்கு வினியோகிக்கப்பட்டதாக ஓட்டமாவடி Ecards நிறுவனத்தின் நிருவாகப்பணிப்பளர் ஜே. பாறூக் தெரிவித்தார்.

நல்லுள்ளம் கொண்ட பண வசதி படைத்த சகோதரர்களே, இந்த இக்கட்டான சூழலில் தம்மாலான உதவிகளை உணவுக்காக கஷ்டப்படும் ஏழைகளுக்கு வழங்கிடுவோம்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed