Main Menu

கல்குடா உலமா சபையின் நிவாரண உதவித் திட்டத்திற்கு ஹிஸ்புல்லாஹ் ஐந்து இலட்சம் நிதியுதவி

முஹம்மது அனீஸ்
கொரோனா தொற்று பரவுவதைத்தடுக்கும் வகையில், நோய் நிவாரண கட்டளைச்சட்டத்தின் கீழ் நாடு பூராவும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக அன்றாடம் தமது வாழ்வாதாரமாக கூலித்தொழிலை நம்பி வாழ்க்கை நடாந்தும் ஏராளமான மக்கள் பாதிப்படைத்துள்ளனர்.

இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை தொழில் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதி சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐந்து இலட்சம் ரூபாய் நிதி இன்று 24.03.2020ம் திகதி
செவ்வாய்க்கிழமை கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினரிடம் உத்தியோகபூர்வமாக கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் பிரதிநிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஏழை மக்களின் துயர் நீக்க துரித கதியில் நிதியுதவிகளை வழங்கிய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு தமது நன்றிகளை உலமா சபையினர் தெரிவித்துக்கொண்டனர்.



Comments are Closed