Main Menu

இறைதிருப்தியை மாத்திரம் எதிர்பார்த்தே எனது பங்களிப்பினை ச்செய்துள்ளேன் – சட்டத்தரணி ஹபீப் றிபான்

ம்.ரீ. ஹைதர் அலி
கொரோனா தொற்று பரவுவதைத்தடுக்கும் வகையில், நோய் நிவாரண கட்டளைச்சட்டத்தின் கீழ் நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தமது வாழ்வாதாரமாக கூலித்தொழிலை நம்பி வாழ்க்கை நடாந்தும் ஏராளமான மக்கள் பாதிப்படைத்துள்ளனர்.

இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கான நிதி சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், அன்றாடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ள நிவாரணம் வழங்கும் நிதி சேகரிப்பு திட்டத்திற்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டத்தரணி ஹபீப் றிபான் கருத்துத்தெரிவிக்கையில்,
எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைமையினாலும் அன்றாடம் வாழ்வாதாரத்தை கூலித்தொழிலினூடாக கொண்டு நடாத்தும் மக்களுக்கு ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தும் வகையிலும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோளின் பேரிலும் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை இந்நிவாரனப்பணிகளை ஆரம்பித்துள்ளதனைப் பாராட்டுகின்றேன்.

ஒரு நல்ல காரியத்தினை ஆரம்பித்து வைப்பவருக்கு அந்நற்காரியத்தினூடாக கிடைக்கின்ற நற்கூலியை எதிர்பார்த்தவனாக எனது பங்களிப்பினை இத்தால் செய்திருப்பதோடு, ஏனைய செல்வந்தர்கள் மற்றும் பொதுநலன் விரும்பிகளையும் இந்நிவாரணப் பணிகளில்தங்களையும் இணைத்துக்கொண்டு பங்களிப்பினை வழங்கி அல்லாஹ்வுடைய நற்கூலியையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன் என சட்டத்தரணி ஹபீப் றிபான் மேலும் தெரிவித்தார்.



Comments are Closed