Main Menu

Digital Libraray

இரண்டாவது அக்கினி அபிஷேகம் – ஓட்டமாவடி நளீம்

ஜனூஷ் உனக்கான அழைப்புக்கேட்கிறது நீயும் பயணப்படுகிறாய். நின் மரணம் மிக அழகானதாயிற்று. ஒரு பிணி தான் தொற்றிக்கொள்ள மாபாவங்கள் கலைந்து நீயும் மாமனிதனாயிற்றாய் ஜனூஷ் கொரோனா உனை கொன்று தின்றதாக நினைக்கவில்லை நானும்.. நீ பயணத்தை தொடர்கிறாய் புனிதமாயிற்று உன் பயணம் நாமோ தியானத்திலிருக்கிறோம் கொரோனாவை கொன்றொழிக்க.. இறப்புக்கு எல்லோரும் காரணம் கற்பிக்கும் உலகில் தானே நானும் வாழ்ந்து தொலைய வேண்டிக்கிடக்கிறது எரிப்போ புதைப்போ இங்கு எதுவானாலும் அரசியல் தீக்குள் அகப்பட்டுத்தான் தவிக்கிறது நீ தகனமான பின்பும் ஆயினும், உன் மரணம் புனிதமாயிற்று ஜனூஷ் இரண்டாவது அக்கினி அபிஷேகத்தால் ஓட்டமாவடி நளீம்