Main Menu

இலண்டன் இஸ்லாமிக் ரிலீஃப் நிறுவனத்தினால் கோறளைப்பற்று மத்தியில் உலருணவுப்பொதிகள் வழங்கல்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பிரதம செய்தியாளர்
இலண்டனை தலைமையகமாகக் கொண்டியங்கி வரும் இஸ்லாமிக் ரிலீஃப் சிறிலங்கா நிறுவனத்தினால் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.றுசைட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், இஸ்லாமிக் ரிலீஃப் சிறிலங்கா நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வை.வி.ஹுஸைன், செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், உதவிப்பிரதேச செயலாளர் அல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடைய குடும்பங்கள் அடங்களாக பதினெட்டு மில்லியன் ரூபாய் பெறுமதியில் 572 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed