Main Menu

கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் பரா ஒலிம்பிக் போட்டியில் மட்டு.மாவட்டம் முதலாமிடம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பிரதம செய்தியாளர்
கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ் பரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் 408 புள்ளிகளைப்பெற்று முதலாமிடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்ற தமிழ் பரா ஒலிம்பிக்போட்டியில் 161 புள்ளிகளைப்பெற்று திருகோணமலை மாவட்டம் 2ஆம் இடத்தையும், 90 புள்ளிகளைப்பெற்று அம்பாறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதிநாள் நிகழ்வு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் எம்.சி.எம்.அன்சார், தலைமையக சிரேஸ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சா.அருள்மொழி மற்றும் எஸ்.செல்வநாயகம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச்சேர்ந்த சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஐபிசி நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன், டேட்டா நிறுவனத்தின் பணிப்பாளர் சம்பந்தன் விருதயர், அபி நிறுவனத்தின் துரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் க.ஜீவராசா, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிற்பகல் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதான இசை நிகழ்வும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed