Main Menu

இன்று சுனாமி ஒத்திகை: மக்கள் அச்சப்படத் தேவையில்லை- அனர்த்த முகாமைத்துவ நிலையம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பிரதம செய்தியாளர்
தேசிய மட்டத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ள சுனாமி ஒத்திகைப்பயிற்சியின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரங்களிலுள்ள 7 எச்சரிக்கைக் கோபுரங்களும் ஒலிக்கப்பட்டு ஒத்திகை நடைபெறும்.

இச்செயற்பாடு குறித்து மக்கள் யாரும் பீதியோ, அச்சமோ கொள்ளத்தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

காலை 9 மணி முதல் 12 மணி வரையில் நடைபெறும் இத்தேசிய சுனாமி ஒத்திகைப்பயிற்சியானது, மக்களைத்தயார்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

அனர்த்தப்பாதுகாப்பு அறிவூட்டல் செயற்பாடாக அமையும் இவ்வொத்திகைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed