Main Menu

நீங்கள் பிறருக்காக சிந்திய கண்ணீர்…..

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.!!
நீங்கள் பிறருக்காக சிந்திய கண்ணீர்
அதுவே அல்லாஹ்விடம் உங்களுக்கு கிடைக்கும் நற்சான்றிதழ்.

கள்ளமில்லா உங்கள் முகத்தை
முகநூலில் கண்ட வேளை
கலங்கி நின்றே எண்ணிக்கொண்டேன்.
அல்லாஹ் உங்களை சீக்கிரமே சுவனத்திற்கு அழைத்து விட்டான் என்று

நீங்கள் ஒருமுறை மரணித்துள்ளீர்கள்.
ஆனால்,
இலங்கை முஸ்லிம்களுக்காக
இலண்டலில் அழுத நினைவுகள் வரும் நேரங்களில்…. நான்
ஒவ்வொரு முறையும் மரணிப்பேனா…!
என்ற மரண பயம் என்ன விட்டபாடில்லை றசாக் நானா.

நீங்கள் எங்களை விட்டுச்செல்லவில்லை
எங்கள் நினைவுகளில் தங்கி விட்டீர்கள்.

நெஞ்சு அடைக்குது நானா
திடீரென மரணிக்கும் வயதா உங்களுக்கு
என எண்ணிப்பார்க்கும் வேளையில்…
என் நெஞ்சு அடைக்குது நானா…

இந்த காட்சியை மிக விரைவில் நாங்கள் காணவா
இனிக்க இனிக்க வந்தது உங்கள் நட்பு எங்களுக்கு…!

மறைந்தது உங்கள் உடல் மட்டும் தான்…
உங்கள் எண்ணமெல்லாம் எங்களுகாகவே இருக்கின்றது..
உலகம் அழியும் அது வரை வாழத்தான் போகின்றது.

நல்ல உறாவினரை, நல்ல நண்பனை
மதிப்புமிக்க சமூதாயத்திற்கான உரிமைக்குரலினை,
இழந்த உள்ளங்கள் அமைதி பெறட்டும்

உங்கள் ஆன்மா ஜன்னத்துல் பிர்தெளசின் வாசனையினை நுகர..
அல்லாஹ்விடம் இரும் கரமேந்த தவறமாட்டோம் நாங்கள்.

பயப்பட வேண்டாம் நிம்மதியாகத் தூங்குங்கள்….
உங்களுடைய வாழ்கையினை அல்லாஹ்
நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்……..

நீங்கள் பிறருக்காக கண்ணீர் சிந்தியவர்…
அதுவே அல்லாஹ்விடம் உங்களுக்கு கிடைக்கும் நற்சான்றிதழ்

உங்களுடைய இழப்பு
இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல
உலக முஸ்லிம்களுக்கும் பேரிழப்பாகும்..

என்றும் உங்கள் நட்புடன் அல்லாஹ்விடம் கையேந்தும்
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed