Main Menu

பொலன்னறுவை-குடாபொகுண மக்களின் முன்மாதிரி: சிங்கள ஊடகங்கள் புகழாரம்

ஆரிப் எஸ்.நளீம்
பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குடாபொகுண கிராமத்தில் தபாலதிபராகக் கடமையாற்றிய K.A.கருணாரத்ன சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக குடாபொகுண நலன்புரிச்சங்கம், KDP அசோசியேசன், KK அசோசியேசன் ஆகியன இணைந்து சுமார் நான்கு இலட்சம்  (400,000) ரூபாய் பணத்தினை அன்பளிப்பாக வழங்கி இருந்தனர். 

மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த உதவி இன நல்லுறவை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதுடன்,  சகோதர மதத்தினரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனை சிங்கள ஊடகங்களும் குடாபொகுண நலன்புரிச்சங்கம், KDP அசோசியேசன், KK அசோசியேசன், பள்ளிவாயல் நிருவாக சபை, ஊர் மக்களின் முன்மாதிரியைப் புகழ்ந்து, பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.



Comments are Closed