Main Menu

ஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் – Dr. sha shaheed (BUMS)

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.என்.எம்.அப்ராஸ்
ஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் என்பதையே மிக முக்கியமாகக்கூறுகிறது. ஆயுள்வேத வைத்தியத்தில் முன்னைய காலம் தொட்டே நோய்த்தடுப்பு முறைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதனில் தொற்றுகள் ஊரில் பரவும் போது எங்கள் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை எப்படி அதிகரித்துக் கொள்வதென்பதையும், பண்டைய காலந்தொட்டே இலங்கையில் நடைமுறையிலிருந்து வந்த நோய்த்தடுப்பு முறைகள் பற்றியும், நவீன ஆய்வுகளில் ஆயுர்வேத மருத்து முறையின் மருத்துவக்குணங்கள் பற்றிய ஆய்வுகளையும் வைத்து நான் சிலதைப்பகிரந்து கொள்கிறேன். அதனில் இந்த கொரோனா பற்றிய முற்காப்பு முறைகள் என்ன?

கொரனாவுக்கு ஆயுள்வேத மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா? என்றால் எந்த ஆய்வும் அது பற்றியில்லை. என்றாலும், ஆயர்வேத மருத்துவத்தில் நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க பின்வரும் படிமுறைகளை மேற்கொள்ள முடியும்.

1. குடிநீர் (கசாயம்)
கொத்தமல்லி, சுக்கு, மரமஞ்சள் அவித்துக்குடித்தல்.ஆய்வுகளில் கொத்தமல்லி என்பது வைரசுக்கெதிராக தாக்கஞ்செலுத்துமென்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு, சுக்கு சளியை போக்கும், நீக்கும் மருந்து என ஆயுர்வேதப்புத்தங்கள் கூறுகிறது. அத்தோடு, சளி தொடர்பான பல நோய்களுக்கு சுக்கு பிரதான மருந்தாகும். மர மஞ்சள் அல்லது மஞ்சட்கொடி என்பது ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவத்தில் பயன்படும் இரத்ததிலுள்ள கிருமிகளைச் சுத்திகரிக்கும், கொல்லும், நீக்கும் மருந்தாகும். எனவே, இவ்வாறானதொரு கசாயத்தைப் பருகுவதால் உங்கள் உடம்பில் நோய் எதிப்பாற்றலைப் பேணிக்கொள்ளலாம்.

அதே நேரம், இம்மருந்து மூலம் நீராவி பிடித்தல் கூட நல்ல பயனைத்தரும். கொரோனா வைரஸ் உயர் வெப்ப நிலையில் அழியக்கூடியது. எனவே, self quarantine செய்து கொள்ளக்கூடிய ஒருவர் இதனைப் பாவிப்பது உகந்தது.

2. சீந்தில் :
ரசகிந்த என்பது சிங்களப்பெயர். இதனோடு நெல்லி, விட்டமின் B கூடிய ஒரு பழம். நெல்லி 10 ரசகிந்த பாணம் பொதுவாக உடலில் செய்யும் வேலை உடலின் இரத்தத்தை சுத்திகரிப்கதோடு, ரசகிந்த காய்ச்சலின் போது ஆயர்வேத மருத்துவத்தில் பாவிக்கப்படும் பிரதான மருந்து. எனவே, உங்களுக்கு கொரோனா தொற்றி இருக்கும் என்ற அச்சத்தில் self quarantine செய்ய இதனைத் தயாரித்துப் பருகலாம்.

இவை தவிர, புகை பிடித்தல்.
புகைப்பிடித்தல் என்பது சாதாரண நடைமுறையில் ஆயுர்வேத மருத்துவத்தில் உங்கள் சுற்றுப் புறச்சூழல் மற்றும் நீங்கள் பாவிக்கும் பொருட்களில் உடைகளிலுள்ள, வீட்டிலுள்ள பொருட்களில் தங்கிய கிருமிகளை அழிக்கப்பயன்படுத்தும் முறையாகும். இதற்காக நீங்கள் குந்திரிக்கம், அகில், துளசி, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை என்பவற்றை தூள் செய்து சாம்பிராணியோடு சேர்த்து சிரட்டைக்கரியைக் கொண்டு புகை பிடிக்கலாம். நான் முன் சொன்னது போல இந்தப்புகை பிடிப்பதன் நோக்கம் உயர் வெப்ப நிலையில் இந்த கிருமிகளை அழிப்பதே. சாதாரணமாக இந்த கொரோனா வைரஸ் கிருமிகள் 50-60 பாகை வெப்ப நிலையில் அழியக்கூடியவை. எனவே, இவ்வாறான முறைகளைப்பயன்படுத்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆனால், உங்கள் கவனத்துக்கு
ஆயுள்வேத மருத்தவம் என்று சொல்லி தினமும் இவற்றைப்பாவிக்க வேண்டாம். குறிப்பாக, இந்த கொத்தமல்லி, சுக்கு கசாயம் தினமும் குடிக்க வேண்டியதில்லை. self quarantine உள்ள சந்தேகிப்பவர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தலாம். இதை மீறி சும்மா இருப்பவர்களெல்லாம் தினமும் மருந்து குடிக்க வேண்டாம்.

இவற்றோடு நீங்கள் இயற்கையான, வீட்டில். சமைத்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இரசாயணப் பதாரத்தங்கள் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

குறிப்பு.
இவை தற்பாதுகாப்பு மாத்திரமே. கொரோனா நோய்க்கான அறிகுறிகளாக இருமல், உடற்சோர்வு, மூச்சுத்திணரல், காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் கட்டாயம் அரசாங்க மருத்துவமனைகளை நாடவும். இங்கே ஆயுர்வேத வைத்தியம் கை கொடுப்பதில்லை.

Dr sha shaheed (BUMS)
Community Health Medical officer in charge
PGD psychology

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed