Main Menu

“ஓட்ட அலி” எனும் ஒளி விளக்கு

இந்த செய்தியைப் பகிர்க >>>

“ஓட்ட அலி” என்றழைக்கப்பட்ட ஷரீப் அலி ஆசிரியர் பாசீசப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டு முப்பது வருடங்களைக் கடந்து விட்டது. இத்துயரில் தனது குடும்பம் அனுபவித்த இன்னல்களை அவரது புதல்வன் கவிதையாக வடித்துள்ளார். இணைய வாசகர்களுக்காகப் பிரசுரிக்கின்றோம்.முஹம்மது சஜாஹ் ஷரீப் அலி

இன்று முஹர்ரம் 20. 1440
இதே நாள் 30 வருடங்களிற்கு முதல்
ஒர் இரவு ஒரு சரித்திரம் எழுதி முடிக்கப்பட்டது.

பிரகாசமாய் எரிந்த “ஓட்ட அலி” எனும் ஓர் விளக்கு அணைக்கப்பட்டது.
ஓர் இயக்கத்தின் கடைசி அத்தியாயத்திற்கான சாபத்தின் ஒரு படி உயர்த்தப்பட்டது.

நான்கு உயிர்களின் நாளை என்பதில் கேள்விக்குறி இட்டது அந்த இரவு.

தந்தை மார்பில் தவழத்தேடிய ஓர் மழழையின் உறக்கம் கபனின் மேல் நடத்தேறியது,
துள்ளித்திரிந்த இரண்டு கன்றுகளின் தன்னம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன,
ஓர் வாலிப பெண் விதவையானாள்

யாருக்குத் தெரிந்திருக்கும்
நமது ஆசானின் ஒழுக்க பாசறை மூடப்படுமென்று

யாருக்கு தெரிந்திருக்கும்
ஓர் நண்பனின் உயிர் ஓய்வெடுக்குமென்று

யாருக்குத் தெரிந்திருக்கும்
காட்டு விதாணையாரின் ஓர் சொத்து காணாமல் போகுமென்று

ஆனால்,
சிலருக்குத்தெரியும்
அந்த சதி இன்று நடந்தேறுமென்று

சிலருக்குத் தெரியும்
அந்த மார்பு குறி வைக்கப்பட்டது

சிலருக்குத்தெரியும்
அந்த தலை இன்று சாயுமென்று

அந்த நாயைக்கண்டால் உரக்க உறைப்பேன் என் கோடி நன்றிகளை
குற்றுயிரைக் காப்பாற்ற குரைத்ததற்கு
ஆறரிவுற்ற அந்த சில மிருகங்களிலும் நீ மேல் என்று.

இன்று அந்த மனிதனின் உழைப்பில் வளர்ந்த மூன்று
மரங்களை அழகாக செதுக்கி உச்சிகளில் தாவித்தாவி உலகை இரசிக்கின்றாள் அந்த விதவை.

இத்தனை பச்சையாய் இருந்தும்
உதிர்ந்து சருகாகி உறமாய் மாறிய அந்த மரத்தின் வாசனையிலே வாழ்கின்றது அந்த சிற்பி.
காலம் பதில் சொன்னது அந்த சதிகாரர்களுக்கு
கண் முன்னே அழிந்து போனார்கள்.

இனியும் வேண்டாம் என் சகோதரனே !
ஒரு உயிரின் பின்னே இத்தனை கருப்பு சரித்திரம் எனில்,
எத்தனை உயர்களைக்காவு கொண்டது கடந்த தசாப்த்தம்.
எத்தனைச் சரித்திரங்கள் புதைந்து கிடக்கும் இத்த மண்னில்.

மறந்து வாழ முடியாது என்னால்
ஆனால்,
மன்னித்து வாழ முடியும்.

இறைவன் தந்த உயிர்களை இறைவன் எடுக்கும் வரை சேர்ந்து வாழ்வோம்.
வா என்னுடன்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed