Main Menu

தேசிய போல் பட்மிண்டன் போட்டியில் வாழைச்சேனை அந்நூர் சம்பியன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

தகவல்-ஏ.எல்.இப்றாஹீம் ஆசிரியர்.
தேசிய போல் பட்மிண்டன் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட முதலாவது ஜூனியர் போல் பட்மிண்டன் சம்பியன்ஷிப் -2018 போட்டியில் 16 வயதிற்குட்பட்ட ஆண் குழு போல் பட்மிண்டன் (Under 16 Ball Badminton) போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை 2018ம் ஆண்டுக்கான தேசிய சாம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டு தேசிய ரீதியில் சாதனை புரிந்துள்ளது.

கடந்த 14 மற்றும் 15.10.2018ம் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட A, B இரு அணிகளும் 20 வயதுக்குட்பட்ட ஒரு அணியும் பங்கு பற்றியிருந்ததுடன், 16 வயதுக்குட்பட்ட B அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதே 16 வயதுக்குட்பட்ட A அணியும் 20 வயதுக்குட்பட்ட அணியும் நான்காவது இடங்களைப் பெற்றிருந்தமையும் பாராட்டுக்குரியது.

இந்தச்சாதனையை அடைந்து கொள்ள பயிற்றுவித்த ஏ.எல்.எம்.இர்பான் (தேசிய பயிற்றுவிப்பாளர்) மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அலோஜிதன் ஆகியோருக்கும் சாதனை புரிந்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்.

 

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed