Main Menu

தேசிய ரீதியில் தொடரும் வாழைச்சேனை அந்நூரின் சாதனைகள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

தகவல்-ஏ.எல்.இப்றாஹீம் ஆசிரியர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டியில் (2018) மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான தேசிய ரீதியிலான போட்டிகள் கொழும்பில் இடம்பெற்றன.

தேசிய ரீதியில் பல போட்டிகளில் இடம்பெற்றதுடன், தேசிய மீலாத் விழா போட்டியின் (2018) கோலாட்டப்போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாமிடத்தை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அணியினர் பெற்றுக் கொண்டதுடன், கிராஅத் போட்டியில் முதலிடத்தினை எச்.எம்.பின் நாஸிமும் பெற்று தேசிய ரீதியில் பாடசாலையின் புகழை அறியச்செய்தது, பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் புகழையும் நற்பெயரையும் பெற்றுத்தந்துள்ளனர்.

வெற்றி பெற்று சாதனை புரிந்த அனைவரையும் மனதாரப்பாராட்டுவதோடு, மென்மேலும் சாதனைகளைப் புரியவும் இந்தச்சாதனையின் பின்னாலிருந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பாடசாலை ஆசிரியர்கள், பாடவிதான ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் மேலும் தெரிவித்தார்.    

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed