Main Menu

வாழைச்சேனையில் மாபெரும் கெளரவிப்பு ஊர்வலம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

தகவல்-ஏ.எல்.இப்றாஹீம் ஆசிரியர்.
அண்மையில் நூற்றாண்டு விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கத் தேவையான பல்வேறு முன்னெடுப்புகளை பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர்கள் சங்கங்கள், ஊர்நலன்விரும்பிகள் மேற்கொண்டு வரும் நிலையில் பாடசாலை புறக்கீர்த்திய செயற்பாடுகளிலும் கோட்ட, வலய, மாகாண மட்டங்களிலும் தேசிய ரீதியிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், கடந்த 14 மற்றும் 15.10.2018ம் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் தேசிய போல் பட்மிண்டன் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட முதலாவது ஜூனியர் போல் பட்மிண்டன் சம்பியன்ஷிப் -2018 போட்டியில் 16 வயதுக்குட்பட்ட B அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

அதே போட்டியில் 16 வயதுக்குட்பட்ட A அணியும் 20 வயதுக்குட்பட்ட அணியும் நான்காவது இடத்தினையும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டியில் (2018) கோலாட்டப்போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாமிடத்தினையும், கிராஅத் போட்டியில் முதலிடத்தினை எச்.எம்.பின் நாஸிமும் பெற்று தேசிய ரீதியில் பாடசாலையின் புகழை அறியச்செய்தது, பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் புகழையும் நற்பெயரையும் பெற்றுத்தந்துள்ளனர்.

குறித்த தேசிய சாதனைகளைப் புரிந்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் நற்பெயரைப் பெற்றுக் கொடுத்த மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கெளரவிக்குமுகமாக பாடசாலை சமூகத்தினால் மாபெரும் கெளரவிப்பு ஊர்வலம் எதிர்வரும் 19.10.2018ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் வாழைச்சேனையில் இடம்பெறவுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed