Main Menu

எங்களன்பின் கபீர் ஆசானே!

இந்த செய்தியைப் பகிர்க >>>
அஷ்ஷெய்க் எம்.எல்.எம். இப்ராஹிம் (மதனி)
ஆசிரியர், ஓட்டமாவடி தேசிய பாடசாலை

ஓட்டமாவடி எம்மண் உதித்த
அமுதமென அவதரித்த கபீர் ஆசானே!
கனிவான பேச்சில் கபடமற்ற உளத்தில்
நொடிப்பொழுதில் கவர்ந்திழுக்கும் காட்சி ஆனோனே!

அன்று முதல் இன்று வரை
என்றும் உன் முகம் வாடியதில்லை!
உன்னோடு பேசியவர் உள்ளம்
என்றும் துன்முகம் நாடியதில்லை!

உனை விரும்பாதோர் யாருமில்லை
வெறுப்போர் என்றெவருமில்லை
இயம்பிட முடியா உன் சேவை
வாழ்த்திட ஓராயிரம் நா தேவை..!

ஆசிரியனாய் அதிபராய் அரும்பணியாற்றினாய்!
மூ தசாப்தம் அதில் நீ கடந்திருந்தாய்!
பாடசாலை வளர்ச்சியை மூச்செனக் கொண்டாய்!
எங்ஙணம் ஈடமைப்போம் உனக்கென தனியிடம் கொண்டாய்!

தொட்டவை துலங்கத் தொண்டு செய்தாய்!
தேசிய பாடசாலை புகழ் தேசியமெங்கும் ஓங்கச் செய்தாய்!
நிகரற்ற உன் உழைப்பை அர்ப்பணிப்பாய் முதலிட்டாய்!
அதற்குக் கட்டிமாய் எமை விட்டு நீங்கி விட்டாய்!

ஏணியாகி பல மாணவ வாழ்வில் ஏற்றம் தந்தாய்!
அறியாமை நீக்கும் அருந்தொண்டாய் அதை நீ தந்தாய்!
ஆயிரமாயிரம் நன்மணிகள் உன் தொண்டால் நீ தந்தாய்!
என்றும் நிலைத்தோங்கும் புகழ்தனைக் கொண்டாய்!

நம் கல்லூரி வரலாற்றில் நீ ஓர் ஏடானாய்!
சான்று பகரும் கட்டடங்கள்இ சாட்சியங்களாகும் செயல் திட்டங்கள்
உன் வரலாற்றை அலங்கரிக்க விட்டுச் சென்றாய்!
இதயங்களெல்லாம் நொறு நொறுங்க, இமைகளெல்லாம் ஈரம் நனைய
எமை நீக்கி இறையடி சேர்ந்தாய்!
எங்களன்பின் கபீர் ஆசானே!

பள்ளிக் காலம் பழகிய நாட்கள்
நட்பில் நனைந்த பசுமையின் தருணங்கள்
நினைவில் நீங்க மறுக்கும் ரணங்கள்!

மரணித்தாய் மாரடைப்பால் எனக்கேட்டோம்!
ஏங்கித் தவித்து மறுத்து நின்றோம்!
மரண வயதா உனது மறுதலித்தோம்!
மரணம் நிச்சயம் அது இறைநியதியெனப் பின் பொருந்திக் கொண்டோம்!
உனை இழந்து நின்றோம்! தேற்றிக் கொண்டோம்!

சுகங்கள் உன்னை சுவனத்தில் அடைய
மண்ணறை வாழ்வும் மலர்ப் படுக்கையில் அமைய
ஜன்னதுல் பிர்தௌஸ் உன்னில்லமாக
இரு கரமேந்துகிறோம்!
எங்களன்பின் கபீர் ஆசானே!

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed