Main Menu

இலுமினாட்டி உண்டா இல்லையா? -ஒரு நடுநிலைப்பார்வை

இந்த செய்தியைப் பகிர்க >>>

மஹ்றூப் எம்.றிஸ்வி
ஒரு சிக்கலான விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அது சம்பந்தமான தெளிவான தகவல் திரட்டல் அத்தியாவசிய ஆரம்ப அடிப்படையான விடயமாகும். இங்கு அந்த தகவல்களே மற்றவர்களை திசை திருப்பும் நோக்கில், திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாயின்இ, சாதாரண வாசகர்களால் அதைப் புரிந்து கொள்வது ஒப்பீட்டளவில் சாத்தியம் குறைவானதாகும்.

விளைவாக பலதரப்பட்ட முரண்பட்ட கருத்துக்கள், தத்தமது தேடலுக்கேற்ப பலராலும் முன்வைக்கப்பட ஏதுவாகிறது. ஆக, தகவல் இருந்தும் தீர்வு காண முடியாதளவு ஒரு பிரச்சினை உருவாகுவது யதார்த்தம் எனலாம்.

நீங்கள் தற்போது இப்படி யோசிக்கலாம். என்ன இந்த கட்டுரை சம்பந்தமில்லாமல் நகர்கிறதென்று. சம்பந்தமில்லாத புள்ளிகளை இட்டு, சம்பந்தமில்லாத நகர்வுகளை, சம்மந்தமில்லாத மனிதர்கள்க் கொண்டு செயற்படுத்துவதே அதி திறமை என நம்பும் இராஜ தந்திர முறைமைகள், கொடி கட்டிப்பறக்கும் இவ்வேளையில், அவ்வகையானதொரு இராஜ தந்திர கட்டுப்பாட்டுப் பொறிமுறையை விளங்குவதற்கு, சில சம்பந்தமில்லாத புள்ளிகளை அலசுவது இன்றியமையாததாகும்.

இது ஒரு தொடர் பகுதி என்பதால், போகப்போக சில முடிச்சுக்கள் அவிழும். எனினும், இது தான் சத்தியம் என்று இத்தொடர் வாசகர்களை எல்லைப்படுத்தாது. மாறாக, பல புதிர்களை உடைக்கும் திறனையும், ஆய்வு செய்யும் நுட்பத்தையும் கூட்டுமென எதிர்பார்க்கலாம்.

அதே நேரம், நேரமற்றவர்கள் அடங்களாக இப்படியான விடயங்களில் ஆர்வமற்றவர்கள், தயவு செய்து இத்தொடரை வாசிக்க வேண்டாம். இது உங்களுக்கு எட்டாத மாயக்கனியாகும். சரி விடயத்திற்கு வருவோம்.

மேலே கூறியது போல, ஏன் அவ்வாறு திசை திருப்பும் தகவல்கள் உருவாக்கப்படுகிறதென்ற கேள்வி பலருக்கும் எழுவது நியாயமானதே. இக்கேள்வியை விளங்க, ஒரு கற்பனை கலந்த உவமைக்கதையொன்றை உதாரணமாக முன் வைத்து நகரலாமென நினைக்கிறேன்.

ஒரு பகுதியில் திடீரென ஒரு கதை பரவியது. அது… கொஞ்சும் கிளி என்ற பெயரில் ஒரு பேய் நடுநிசியில் வலம் வருவதாகச் சொல்லப்பட்டது. மக்கள் பீதி கொள்ள ஆரம்பித்தனர். அப்போது அதை உண்மைப்படுத்தும் வகையில், சில அசம்பாவிதங்கள் நடந்தன.

வீதியில் வித்தியாசமான சத்தம் உட்பட, திடீரென ஒரு பெண் தோன்றி மறைவது அவற்றில் பிரதான நிகழ்வாகும். இதை நேரில் கண்டவர்கள் நோயால் அவதிப்படுவது, இதன் பக்க விளைவுகளில் ஒன்றாகும்.

இது பொய்யென்று வாதாடியவர்களில் பலர், இலக்கு வைக்கப்பட்டு அவ்வாறான அசம்பாவிதங்களால் பாதிப்படைந்தனர். இக்காலப்பகுதியில் மற்றுமொரு நிகழ்வாக, ஒரு சில பணக்காரர்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன.

எனவே விஷேட பொவிஸ் குழுக்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டனர். அவ்வாறு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்ட  பொலிஸ் நபர்கள் பலரும், இப்பேய் சம்பவத்திற்கு இலக்காகியமை இன்னுமொரு சுவாரஷ்யமான சம்பவமாகும்.

இரவில் காவல் நிற்பதற்கு நினைத்தாலே, பயத்தின் காரணமாக பலருக்கு சிறுநீர் வழிந்தோடியது. கண் முன்னே என்ன நடந்தாலும், ஒரு எட்டுக்கூட முன்னாடியோ அல்லது பின்னாடியோ அவர்களால் வைக்க முடியாத நிலை தோன்றிது.

எந்த இடத்தில் யார் யார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டார்களோ, அந்த இடத்தில் அவர்கள் தமது கடமையை கடமைக்காக முடித்துக் கொண்டனர். ஆக, எந்தவித இடையூறுகளுமின்றி, ஒரு புறம் பேய் பிரச்சினையும் மறுபுறம் கொள்ளைச் சம்பவங்களும் தொடர்ந்த வண்ணமிருந்தன.

இங்கு தான் ஒரு நல்ல, திறமையான, ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரியும் வாழ்ந்து வந்தார். அவரது மண்டையை பல விடயங்கள் குடைந்து கொண்டிருந்தன. அவற்றுல் மிக முக்கியமானவையாக அவர் பின்வருவனவற்றைக் கருதினார்.

திரட்டப்பட்ட தகல்களின்படி, இதுவரை பலர் பேயை நேரடியாகக் கண்டுள்ளனர். பலர் பிடிப்பதற்காக முயற்சித்தும் தோல்வியடைந்துள்ளனர். எனினும், பேய் திடீரென தோன்றி கண் முன்னே திடீரென மாயமாகிறது. பேயால் பௌதீக ரீதியாக யாரும் பாதிக்கப்படவில்லை. சம்வம் உண்மையெனில் இது எவ்வாறு சாத்தியம் என்பன அவற்றில் அடங்கிய முக்கிய விடயங்களாகும்.

அடுத்ததாக பேய் சம்பவம் நிகழும் அதே கால எல்லைக்குள், எப்படி கொள்ளைகள் இடம்பெறுகின்றன? எனவே, இதைச்செய்பவர்கள் ஏன் பேய்க்கு பயப்படவில்லை?. என்பன அவரது மனதில் உதித்த அடுத்தடுத்த கேள்விகளாகும்.

எனவே ஆய்வு செய்ய களத்திலிறங்கினார். தமது மேலதிகாரிகளுக்கு தாம் இதை ஆய்வு செய்ய அனுமதி வேண்டினார். திறமையான மனிதர் என்பதால் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. எனவே உடனடியாக வேலையில் இறங்கினார்.

நகரின் பல இடங்களில் இரகசிய கமாராக்களை யாருக்கும் தெரியாமல் பொருத்தினார். ஓரிரு நாட்கள் அவதானித்த போது, சில திகிலடையும் சம்பவங்களை அவர் கண்டறிந்தார். அதாவது, எந்தவித ஒலி மற்றும் ஒளியுமின்றி ஒரு வாகனம் வருகிறது. ஒரு சிலர் அதிலிருந்து இறங்குகின்றர்.

கருத்த ஆடைகளுடன் முகமூடிய நிலையில் காணப்பட்ட அவர்கள், கீழிறங்கிய பின்னர் இன்னுமொரு ஆடையை அணிய, உரு மறைந்து விட்டனர். சிறிது நேரம் மயான அமைதி நிலவுகிறது. அப்போது மறுபடியும் அவர்கள் அவ்வாடையை கழட்ட கமராவால் அவதானிக்க முடிந்தது.

ஆக இவர்கள் எங்கோ சென்று திரும்பி இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டார். திரும்பி வந்த அதே நபர்கள் மறுபடியும் வாகனத்தில் ஏறிச் சென்று விடுகின்றனர்.

இதன் பிற்பாடு, சிறுது நேரத்தில் பல இடங்களில், வித்தியாசமான சப்தங்கள் கேட்டன. இரவு காவலர்கள் உட்பட சில தைரியமான மக்கள் வீதிக்கு வருகின்றனர். அவர்கள் வீதிக்கு வருவதற்கும் அச்சப்தம் ஓய்வதற்கும் சரியாக அமைந்திருந்தது.

அப்போது ஒரு கமராவில், ஓரிடத்தில் ஒரு உருவம் தோன்றி மறைந்ததை அவதானித்தார். உடனே அந்த இடத்தில் நின்ற பலர், நின்ற இடம் தெரியாது ஓடி மறைந்தனர். அதன் பிற்பாடு யாருமே வெளியில் வரவில்லை.

சிறிது நேரத்தின் பின், அதே வாகனம் வருகிறது. அதே முகமூடிகள் வருகின்றனர். முன்னர் போல வெளியேறி பின் திரும்பி வர, மறுபடியும் வாகனம் மறைந்தது. ஆனால், ஓரிடத்தில் அது இன்னுமொரு வாகனத்தைச் சந்தித்து, சிறிது நேரத்தின் பின் நகர்ந்தது. அந்த வாகனம் அப்பிரதேசத்தின் இரகசிய காவல் பிரிவின் தலைவருடையதாகும்.

மறுநாள் காலையில் வழமை போல் பலதரப்பட்ட கதைகள் வெளிவர, மறுபடியும் ஓரிடத்தில் கொள்ளையிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

எனவே, ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரி உசாரனார். உடனடியாக தான் வேலை செய்த மேல் மட்டத்திற்கு தொடர்பு கொண்டு சில விசயங்களைக் கலந்துரையாட, இவரது தலைமையில் இன்னுமொரு இரகசியப் பிரிவு களமிறங்கியது.

அடுத்து சில நாட்களிலேயே பலர் கைது செய்யப்பட்டனர். அதில் அப்பிரதேச தலைமை இரகசியப் பாதுகாப்பு அதிகாரியும் காணப்பட்டார். ஆக, கள்ளனும் அவரே பொலிஸும் அவரே என்ற சதிக்கோட்பாட்டை அவர் நடைமுறைப்படுத்தி இருப்பதை காணலாம்.

அடுத்த ஒரு சில பொழுதுகளில், ஒரு துரதிஷ்டமான நிகழ்வு நடந்திருந்தது. அது உடனடியாக இரகசியப் பிரிவுத்தலைவர் எந்தவித நிபந்தனையுமின்றி, விடுதலை செய்யப்பட்டு, மற்றவர்கள் மாத்திரம் உள்ளடைக்கப்பட்டனர்.

மேலும், இந்தப்பிச்சினைகை்கு தீர்வு கண்டவராக, அந்த கள்ளத்தனமான இரகசியப் பாதுகாப்பு அதிகாரியையே மக்களுக்கு அரசு அறிவித்ததோடு, அது மட்டுமின்றி, உண்மையில் இதைக்கண்டு பிடித்த அந்த ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரியை ஒரு இரகசிய இடத்தில் வைத்து கொலை செய்தும் விட்டது.

ஆக, பிரச்சினையின் ஆணி வேர் வெட்டப்பட்டது. அப்படியே ஒரு சிறு பிரச்சினை போல் மூடி மறைக்கப்பட்டது. மறுபடியும் இன்னுமொரு ஒரு நிகழ்ச்சி நிரல் தயாராகும் வரை சகல நகர்வுகளும் கைவிடப்பட்டதெனலாம். இதை அறியாத மக்களும், பிரச்சினை முற்றுப் பெற்றதாக நினைத்து அமைதியாகினர்.

நடந்தது இது தான். சுருக்கமாகச் சொன்னால், தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட ஒலியின் பரிமாணங்களூடாக கட்டமைக்கப்பட்ட முப்பரிமான (டிஜிடல் நேரடி) ஒலியையும், அதே போல் ஒளியின் பரிமாணங்களூடாக கட்டமைக்கப்பட்ட ஹோலோகிராம் உருவமைப்பையும், அதே போல் மக்கள் கண்ணில் படாமலிருக்க நனோ தொழில்நுட்பம், ஒளி ஊடுருவும் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், தேர்மல் கமெரா தொழில்நுட்பம் உட்பட பலதரப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட, சாதாரண மனிதக்கண்ணுக்கு புலப்படாத வாகனச் செயற்பாடு மற்றும் ஆடைகளையும் ஒட்டு மொத்தமாகப் பயன்படுத்தி, மக்களை அவர்களது இயல்பு நிலையிலிருந்து குழப்பி விட்டிருந்தனர். மறுபுறம் பொருளாதார வளமிக்க இடங்களை, திட்டமிட்ட முறையில் கொள்ளையடித்துள்ளனர்.

பௌதீக ரீதியில் ஒரு விடயம் மிகைத்து நிற்க, பிரதானமாக ஐந்து விடயங்கள் அவசியம். அவை அறிவு, தொழில் நுட்பம், திட்ட வரைபு, பணம், ஆளணி என்பனவாகும். எனவே, இங்கு அவை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதெனலாம்.

அதே நேரம், அப்போதைய அரசுக்குள்ளிருக்கும் யாரோ ஒரு சிலரே, இந்த திட்டங்களுக்கு உண்மையான மூளையாகச் செயற்படுகின்றனர் என்பதை கொலை செய்யப்பட்ட அந்த ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரி மாத்திரமே அறிந்திருந்தார்.

அந்த அரசியல்வாதிகள் அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வதற்கும் ஒரு காரணமிருந்தது. அது தமக்கு சவாலாகவுள்ள பண பலம் படைத்த தமது அரசியல் எதிரிகள், உடமையிழந்து நடு வீதிக்கு கொண்டு வரப்பட வேண்டுமென்பதே.

அதாவது, அப்போதைய அரசியல்வாதிக்கு ஜால்றா அடிக்காத, பல பணம் படைத்த, மக்கள் செல்வாக்கைக் கொண்ட, பணக்காரர்கள் திட்டமிட்டு கொள்ளையிடப்பட்டு நடு வீதிக்கு கொண்டு வரப்பட்டதே பிரதான இலக்காகும்.

ஆக, வெளியில் நேரடியாகத் தெரிந்த பேய்ச்சம்பவமும் ஒரு தகவல் தான். மாறாக, இதன் பின்னால் மறைந்திருந்த கொள்ளையடிப்பும் ஒரு தகவல் தான். அதாவது, இரண்டும் உண்மை தான். ஆனாலும், முதலாவது தகவல் மற்றவர்களை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயற்கைத் தகவலாகும்.

அநேகமான இன்றைய வாசகர்கள் இது போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தகவல்களையே அதி உண்மையாக மது அறிவுக்கெட்டிய வாசிப்பினுாடாக உய்த்தறிந்து கொள்கின்றனர். ஆனாலும், யதார்த்தம் இதைத்தாண்டி முன் நகர்ந்துள்ளது.

மேலும், இன்றைய ஊடகங்கள் இவ்வாறான இருட்டடிப்புத் தகவல்களையே மக்களுக்கு பெரும்பாலும் முன்வைக்கிறதெனலாம். காரணம் அதனுாடாகவே வாசகர்கள் மேலே செல்லாது மட்டுப்படுத்தப்படுகின்றனர்.

மாற்றமாக, நுண்ணறிவுமிக்க வாசகர்கள், இரண்டாம் நிலை பின்னணித் தகவலையறிந்து கொள்ளவே முயற்சிப்பார்கள். சில நேரம் அதில் வெற்றியும் பெறுவார்கள். அப்படியானவர்களே இரகசிய அஜந்தாக்களை நகர்த்தும் சதிக்கும்பல்களுக்கு மிக்க சவாலானவர்களாகும்.

இந்த உதாரண விளக்கத்துடன், தற்போதைய இலுமினாட்டி பிரச்சினையை நாம் அணுகினால் பல விளக்கங்களைப் பெற முடியும்.

எனவே, மேற்கூறிய உதாரணத்திலுள்ள அரசியல்வாதிகள் போன்று செயற்படும் ஒரு இரகசியக்கும்பலானது, ஒழுங்கமைந்த செயற்கை வெளித்தோற்றக்கட்டமைப்பைக் கொண்டதும், உள்ளக இரகசிய நிகழ்ச்சி நிரல் கொண்டதும், பல தரப்பட்ட சதிக்கோட்பாடுகளைக் கையாளும் திறமை கொண்டதும், உலகத்தரம் வாய்ந்த கள்ளனும் அதே போல உலகத்தரம் வாய்ந்த இரகசிய பாதுகாப்புப் பிரிவும் இணைந்ததுமாக, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று உருமாறி, முரண்பாட்டு அஜந்தாக்களுக்கூடாக மக்களையும் அதனுாடாக இவ்வுலகையும் கட்டுப்படுத்த முடியுமென்றால்….

நிச்சயமாக, இலுமினாட்டி இரகசியக்கும்பல் உண்மையாக இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகமே.
ஆக, தற்போதைய உலக ஒழுங்கைத் தீர்மாணிக்கும் சக்திகள் முதல் அதை எதிர்க்கும் போலியான மற்றும் உண்மையான சக்திகள் இதனால் பாதிக்கப்படும் சக்திகள், அதே போல் இறுதியாக அடையப் பெறும் பெறுபேறுகள் உட்பட களத்தில் நிற்கும் இறுதிக்கூட்டணி எவ்வாறு அமைகிறது.

அது எந்ததெந்த சக்தியை வலுப்படுத்துகிறது போன்ற ஆழத்தகவல்கள் வரை ஆராய்ந்த பின்னரே ஒரு இரண்டாம் நிலைப்பின்னணி ஆய்வை மேற்கொள்ளும் ஒரு வாசகனால், இன்னும் தெளிவை நோக்கி நகர முடியும்.

ஆக, தற்பேதைய உலகு எவ்வாறு நகர்கிறதென்பது பற்றி நாம் முதலில் நோக்குவது இன்றியமையாதது.

(தொடரும்….)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed