Main Menu

ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் பஸ் கொள்வனவுத்திட்ட இறுதிக்கணக்கறிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

Media-OBA Qatar
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க கட்டார் கிளையினாரகிய எம்மால் முன்னெடுக்கப்பட பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்று, நாம் வாக்குறுதியளித்தபடி பஸ் வண்டியையும் பாடசாலைக்கு கையளித்து விட்டோம்.

இந்தப்பயணத்தில் நிதியுதவியளித்த, நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மற்றும் இன்னோரன்ன வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதன் தொடரில் எம்மால் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட நிதி சேகரிப்பு பற்றிய இறுதிக்கணக்கறிக்கையின் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டுமெனும் வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருமான மற்றும் வங்கிக் கணக்கறிக்கையூடாகச் சமர்ப்பிக்கின்றோம்.

கட்டங்கட்டமாக எம்மால் முன்னெடுக்கப்பட்ட நிதி சேகரிப்புத்திட்டங்களூடாக சேகரிக்கப்பட்ட நிதி வரவு, செலவுகளை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளோம்.

அத்தோடு, பஸ் வண்டி கையளிப்பு இறுத்திக்கட்ட நிகழ்வின் செலவும் கணக்கறிக்கையில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. எம்மால் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் நேரடியாக  வைப்பிலிடப்பட்ட தொகை என்பன சரியான வங்கி நடைமுறைகளைப் பேணி நடைமுறைப்படுத்தப்பட்டமை பற்றிய தெளிவான விபரங்களையும் இத்தோடு இணைத்துள்ளோம்.

மேற்குறித்த எமது வரவு செலவு பற்றிய மொத்த இறுதிக்கணக்கறிக்கையும் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் கணக்காளர் எம்.பி.எம்.இஸ்ஸத் அவர்களால் தயாரிக்கப்பட நிருவாகத்திலுள்ள அனைவராலும் சரி பார்க்கப்பட்டு ஊர்ஜித்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கணக்கறிக்கை தொடர்பான மேலதிக விபரங்கள் தேவையானோர் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் கணக்காளர் எம்.பி.எம்.இஸ்ஸத் அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு
Mobile No:  00974 6603 1219
Whatsapp:  00974 6603 1219
Mail : occanqatar@gmail.com

குறிப்பு:
எம்மோடு இப்பஸ் கொல்வனவுத்திட்ட நிதி சேகரிப்பில் இணைந்து செயற்பட்ட எமது மீடியா இணைப்பாளரில் ஒருவரான AGA.ஹனீஸ் தற்சமயம் நாட்டில் இருப்பதால் அவரால் இந்த இறுதிக்கணக்கறிக்கையில் கையொப்பமிட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

நன்றி
பழைய மாணவர் சங்க கட்டார் கிளை
ஓட்டமாவடி தேசிய பாடசாலை

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed