Main Menu

சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கொரோனா விழிப்புணர்வு

(எம்.எம்.ஜபீர்)
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சம்மாந்துறைப் பிரதேச மக்களைப்பாதுகாக்கும் நோக்கில் நாட்டில் அமுப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதைத்தொடர்ந்து சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பொது மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டத்தினை இன்று முன்னெடுத்தனர்.

சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சட்ட முதுமாணி எம்.ஏ.எம்.லாபீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கொரோனா வைரஸ் என்றால் என்ன? வைரஸ் பரவும் முறை, அதனால் ஏற்படும் பாதிப்பு, வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது எப்படி? போன்ற விடயங்கள் தொடர்பாக பொது மக்கனை விழிப்பூட்டும் நோக்கில் ஒலிபெருக்கி மற்றும் துண்டுப்பிரசும் மூலம் பொது மக்கள் விழிப்புணர்வு செய்யப்பட்டனர்.



Comments are Closed