Main Menu

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவது எப்படி? Dr. எஸ்.அஹமட் பரீட்

இந்த செய்தியைப் பகிர்க >>>

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதானது மக்கள் மத்தியில் பெரும் பீதியை தோற்றுவித்துள்ளது. அரசாங்கம் தற்பொழுது தனிமைப்படுத்தல் ஆயத்தங்களை இராணுவத்தினரின் உதவியோடு முன்னெடுத்துள்ள போதும் விமான நிலையத்தை மூடியுள்ள போதும், உலகளாவியரீதியில் corona நோய் தொற்று அதிகரித்து இருந்த வேளையில் இலங்கையில் பரவுவதை தடுக்க போதிய அளவு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசு தவறிவிட்டது.

இலங்கையில் இந்த நிமிஷம் வரைக்கும் 51 பேர் Corona நோய் தொற்றுக்கு  உள்ளாகி இருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது அதில் மூன்று பேர் குணமடைந்துள்ளனர். 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்தவிதமான உயிரிழப்புகளும், எந்தவிதமான அதி தீவிர நோய் நிலைமையும் அவதானிக்கப் படவில்லை.  தற்போதைய நிலைமை வரைக்கும் நாம் ஓரளவு திருப்தியாக இருந்தாலும், எதிர்வருகின்ற ஒன்று இரண்டு கிழமைக்கு நிலைமை எவ்வாறாக தலைகீழாக மாறும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது உள்ளது. இந்த புதிய covid 19 வைரஸ் இனது தாக்கம்  நோயியல் தன்மையானது மருத்துவ உலகத்திற்கு புதுமையானது என்றாலும் அதனை கட்டுப்படுத்த , குணப்படுத்த மருத்துவ உலகத்தால் முடியாதது அல்ல. ஏனைய Corona வைரஸ்களை விட இந்தப் புதிய வைரஸ் ஆனது ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரவும் தன்மை ( highly contagious) மிக மிக அதிகமாக காணப்படுகின்றது. சாதாரணமான தடுமல் வைரஸ் காய்ச்சல் சராசரியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு (1) பரவக்கூடியது, ஆனால் இந்த covid 19 ஆனது சராசரியாக ஒருவரிடமிருந்து 3.2 பேர்களுக்கு பரவக்கூடியது. மேலும் இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு இதுவரையில் அறியப்பட்ட வரையில் 3%. அதாவது 100 பேருக்கு இந்த வருத்தம் தொற்றினால் மூன்று பேருக்கு மாத்திரமே மரணம் சம்பவிக்கலாம். இந்த 3% வர்கள் பெரும்பாலும் வயதானவர்களும் ஏனைய வருத்தங்களை உடையவர்கள் ஆகும். இதுவரைக்கும் அறியப்பட்ட வகையில் சிறியவர்களும் நடுத்தர வயதினரும் பெரும்பாலும் சிறிதளவிலான நோய் தாக்கத்திற்கு உட்பட்டு பூரண குணத்தை அடைகின்றனர். இந்த வைரஸ் தாக்கமானது அதிகமாக 3 தொடக்கம் 6 மாதங்களுக்கு இந்த உலகை Corona என்ற பயத்தில் வைத்திருக்கதான் போகிறது.

இலங்கையைப் பொருத்தவரையில் மற்ற நாடுகளில் ஒப்பிடுகையில் முதல்வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது மிகவும் பாரதூரமான நிலையில் உள்ளோம். ஆனால்  இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகமானோர் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கின்றவர்கள். இவர்களால் மற்ற பொதுமக்களுக்கு நேரடியாக எவ்வித ஆபத்துக்களும் இல்லை, இவர்களை கண்காணிக்கின்ற இராணுவத்தினர் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் நேரடியான ஆபத்தில் இருக்கின்றார்கள். அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தினதும் அவர்களது தனிப்பட்ட கடமையுமாகும். ஆனால் பொதுமக்களிடையே புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்ற corvid 19 positive நோயாளியை கருதும்போது இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இவ்வாறாக பொதுமக்களிடையே கண்டு பிடிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் நிச்சயமாக கட்டுக்கடங்காதவாறு  பொது மக்களிடையே பரவ ஆரம்பிக்கும். இவ்வாறாக நூறு பேரு க்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் போது மூன்று பேர் மரணிக்கும் நிலையும் ஏற்படலாம். இதை கருத்தில் கொண்டு இன்று அரசாங்கம் Corona நோயாளி ஒருவர் மரணித்தால் அவரை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்ற நியதிகளை கூட வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் தற்பொழுது வெளிநாட்டு விமானங்களை தற்காலிகமாக தடை செய்து இலங்கைக்கு நோய் வருவதை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளது.  ஆனால் இத்தாலி, கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நோய்த்தாக்கம் அதிகமாக இருந்த வேலையில் அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் சுதந்திரமாக சுற்றுவதற்கு இலங்கையில் எந்த தடையும் இருக்கவில்லை. மேலும் மிக அண்மையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களும் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிகழ்ச்சி நிரலில் இருந்து தப்பியுள்ளனர். இவர்களை தேடிப் பிடிக்கும் வேலை யில் போலீசாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். புத்தளம் சிலாபம் பகுதியில் கிட்டத்தட்ட 800 க்கும் அதிகமானவர்கள் மிக அண்மையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். இவ்வாறான நபர்கள் எந்த அளவு பொதுமக்களிடையே covid 19 வைரஸை பரப்பியுள்ளனர் என் யாருக்கும் தெரியாது. இவ்வாறாக அந்த நாடுகள் இருந்து  வந்தவர்களை போலீசார் தேடி அவதானித்த பொழுது பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு உள்ளனர், வணக்க ஸ்தலங்களுக்கு சென்று உள்ளனர், ஷாப்பிங் மால் சென்றுள்ளார்கள், அவர்களது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார்கள்.  ஆகவே covid 19 ஆனது இவர்கள் சார்ந்து இருந்த இடங்களுக்கும், சார்ந்து  இருந்தவர்களுக்கும் பரப்பப்பட்டு இருக்கும் என்பதே உண்மை..

இவ்வாறு பரப்பப்பட்ட வைரஸ் ஆனது
சூழலில் வெவ்வேறு கால நேரங்களுக்கு உயிர்வாழும். உதாரணமாக
1. காற்றில் – 3 hrs
2. கார்ட்போர்ட், கடதாசி-  24 hrs  ( காசு, நியூஸ்பேபர்ஸ்
3. பிளாஸ்டிக்- 2 to 3 days (  மொபைல் போன் லேப்டாப், பஸ்களின் சீட்டுகள், பிளாஸ்டிக் பேக்ஸ், கதிரைகள் மேசைகள். )

4. Stainless steel –  2 to 3 days ( துருப்பிடிக்காத இரும்பு, eg. கதவின் கைப்பிடிகள், மாடிப்படிகளில் கைப்பிடிகள், மின் உயர்த்தி களின் சுவிட்சுகள், வாகனங்களின் கைப்பிடிகள், திறப்பு,

ஒருவருக்கு இந்த வைரஸ் இருந்தால் அவரிடமிருந்து இந்த வைரஸ் சுவாசத்தின் மூலமாக, வாய் மூக்கு போன்றவற்றிலிருந்து வரும் திரவங்கள் ஊடாக வெளியே வரும். ஆகவே ஒருவர் முகத்தைத் தொடும் போது அந்த வைரஸ் அவரின் கைக்கு சென்றடையும். இந்த வைரஸ் உடைய கையினால் அவர் எதை எதை கொடுக்கிறாரோ அதில் அவர் வைரஸை படுத்தி செல்கிறார். இன்னொருவர் அந்த இடத்தை தொடும் பொழுது கையின் ஊடாக அந்த வைரஸை பெற்றுக்கொள்கிறார். நோய் உடையவர் தும்மினாலோ இருமினாலோ காற்றில் பரவுகின்ற வைரஸை சுவாசி ப்பதினாலும் மற்றொருவர் வைரசை பெற்றுக்கொள்கிறார். ஆகவே எதிர்வரும் ஓரிரு வாரங்கள் மிக முக்கியமானவை. பொதுமக்கள் கடந்த ஒரு கிழமையாக என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனரோ  அதை தொடர்ச்சியாக மேலும் இரண்டு மூன்று கிழமைகளுக்கு செய்ய வேண்டும். மீடியா கவரேஜ் குறைந்ததாலும், அரசாங்கம் தேர்தலை முன்னிறுத்தி Corona வை மறந்தாலும், பொது மக்களாகிய நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு பொதுவாக எல்லோரும் தவறு விடக்கூடிய சில விடயங்களை சுற்றி காட்டுவதன் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு , சமூகப் பொறுப்புடன் நீங்கள் இந்த covid 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டுக் காட்டலாம் என நினைக்கின்றேன்.

1. வீணாக வெளியில் செல்ல வேண்டாம்.  மிக முக்கிய அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அரசாங்கம் லீவு கொடுத்த போதும் சிலர் சுற்றுலாக்கள் செல்வதற்கும் வெளியே கூட்டங்களைக் கூட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். எதிர் வருவது பண்டிகை காலம் என்பதால் அதிகமானோர் கடைகளுக்கு செல்கின்றனர்.  இது முற்றாக தடுக்கப்பட வேண்டும்.

2. அத்தியாவசிய தேவையின் போது வெளியே செல்ல ஏற்பட்டால் கட்டாயமாக மற்ற மனிதர்களிலிருந்து ஒரு மீட்டர் தூரத்தை வைத்திருக்கவும். முகக் கவசங்களை அணிந்து செல்லவும். ஏலுமான அளவு பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அலுவலங்களில் தேவைக்காக வரிசையில் நிற்கும்போது, கடைகளில் வரிசையில் நிற்கும்போது போதிய அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும். ஒருவரை தொட்டு கை கொடுத்து வரவேற்பதை முற்றாக நிறுத்த வேண்டும்.

3. வெளியில் தேவைக்காக செல்லும்பொழுது ஏனைய மேற்பரப்பு களுடான தொடுகையை என்ற அளவு குறைக்க வேண்டும். அடிக்கடி கதவுகளின் கைப்பிடியை பிடிப்பது, சுவர்களை தட்டித் தடவி நடப்பது, படிக்கட்டுகளின் கை பிடிகளை பிடித்துக்கொண்டு நடப்பது, பஸ்களில் நின்று கொண்டு செல்லும்போது பிடிக்கும் கம்பிகளை தொடுவது என்பன முற்றாக தடுக்கப்பட வேண்டும்.

4. வெளியே சென்று வீட்டுக்கு வரும் ஒவ்வொரு வேளையும் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டே உள்நுழைய வேண்டும். தங்களது வீட்டில் உள்ள அனைவருக்கும் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

5. பூங்காக்கள் , உடற்பயிற்சி நிலையங்கள், பகுதிநேர வகுப்புக்கள், மனிதர்கள் நிறைந்து வழிகின்ற கடைத் தெருக்கள், சுற்றுலா விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், மதஸ்தலங்கள் என்பவற்றுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

6. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் பெப்ரவரி முதலாம் திகதி பிறகு ஐரோப்பா நாடுகள் குறிப்பாக இத்தாலி, கொரியா, சிங்கப்பூர் ஈரான், கட்டார், போன்ற நாடுகளிலிருந்து வந்து இலங்கையில்  வீட்டுக்குள் தனிமைப்படுத்தபடாமல் தான்தோன்றித்தனமாக சுற்றி திரிந்தால்  பின்வரும் தொலைபேசி க்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்குங்கள்( 0113071073 / 0710107107). அல்லது பிரதேச PHI அல்லது பொலிசாருக்கு தெரியப்படுத்துங்கள்.

7. தேவையின்றி சிறுசிறு தேவைகளுக்கு வைத்தியசாலைக்கு சமூகம் அளிப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ இருமல், காய்ச்சல் , தொண்டை நோவு, மூச்செடுக்க சிரமப்படுதல் போன்ற நோய் அறிகுறி களோடு, மிக அண்மையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் நீங்கள் தொடர்பு பட்டு இருந்தால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு தொடர்புகொண்டு வைத்திய ஆலோசனை பெறவும். நீங்களாகவே ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டாம். உங்களது நிலையை மருத்துவருக்கு எடுத்துக்கூறி மருத்துவரின் ஆலோசனையுடன், நீங்கள் வருவதை முன்னேறவே வைத்தியசாலைக்கு அறிவித்து,  முக கவசம் அணிந்தவாறு நேரடியாக வைத்தியரை சந்திக்கவும்.

8. இந்த நோய் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது வயதானவர்களுக்கும், உயர் குருதி அமுக்கம் இருப்பவர்களுக்கும், ஆஸ்த்மா , நீண்ட நாள் புகை பாவனையால் நுரையிறல் பாதிப்பு அடைந்தவர்களுக்கும், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கும், steroid Medicine ( immune suppressors) பவிப்பவர் களுக்கும் ஆகும். ஆகவே இவ்வாறானவர்கள் வீட்டில் இருந்தாள் அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டுக்குள் தனிமைப்படுத்துதல் செய்ய வேண்டும்.

9. அதிகமாக காசுடன் வேலை செய்பவர்கள் உதாரணமாக வங்கி காசாளர், பஸ் நடத்துனர், கடை முதலாளி , பெட்ரோல் நிலையங்களில் வேலை செய்பவர்கள், பணமாற்று நிலையங்களில் வேலை செய்வார்கள் மிக அதிக அதிகமாக இடைக்கிடையே கைகளை கழுவிக் கொள்ள வேண்டும்.

10. போதிய அளவு தண்ணீர் பருகவும், உடல் வலிகளின் பொழுது பரசிட்டமோல் மாத்திரை மட்டுமே பயன்படுத்தவும். NSAIDS சார்ந்த வலி நிவாரண மாத்திரைகளை பாவிக்க வேண்டாம்.

இந்தக் Corona உலகத்தை அழிக்க வந்தது அல்ல, இது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இருக்கப் போகின்ற வருத்தமும் அல்ல. மேலே குறிப்பிட்ட விடயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். முற்றாக நிறுத்திவிடலாம் என்று கூறமுடியாது. நோய் பரவும் தன்மையானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரையிலே வைத்தியசாலைகளும், அதில் சேவை புரிகின்ற வைத்தியர்கள் தாதியர்க ளும் ஏனைய உத்தியோகத்தர்கள்,  I C U BEDS களும் தாக்குப் பிடிக்க முடியும். நோய் கட்டுக்கடங்காமல் பரவும்போது, வைத்தியசாலை ஊழியர்கள் தொற்றுக்கு உள்ளாகும் போது எதிர்பாராத அசம்பாவிதங்களும் தவிர்க்க முடியாத மரணங்களும் ஏற்படலாம்.

வைரஸ்களுக்கு எதிரான போதிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை கொண்டது எமது உடல். இந்த Corona வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் 97 வீதமானவர்கள் குணமடைவதும் இவ்வாறாக வைரஸுக்கு எதிராக எமது உடல் உருவாக்கும் எதிர்ப்புசக்தி காரணமாகவே. சமூகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த நோய் பரவும் எனில்,  நோய் எதிர்ப்பு சக்தி சமூகத்தில் படிப்படியாக அதிகரித்து ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முற்று முழுதாக கட்டுப்படுத்தப்படும்.  மாறாக கட்டுக்கடங்காமல் இந்த நோய் சரசரவென பொதுமக்களிடையே பரவும் எனில், நோய் எதிர்ப்பு சக்தி சமூகத்தில் உருவாவதற்கு இடையில் பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தி, வைத்தியசாலை ஆளணி மற்றும் பௌதிக வளங்களை அதிகமாக சேதப்படுத்தி, china, Italy , Iran போன்ற நாடுகளில் ஏற்பட்ட சேதங்களை நாமும் அனுபவிக்க நேரும்.

ஆகவே இந்த நோயை கட்டுப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் என்னதான் பிரயத்தனங்கள் எடுத்தாலும் சமூகப் பொறுப்பு ஒவ்வொருவரும்  நபரும் கரிசனையுடன் மேற்குறிப்பிட்ட விடையங்களை தொடர்ந்தேர்ச்சியாக மூன்று நான்கு வாரங்களுக்கு செய்வதன் மூலமே உண்மையாக இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

Dr. S. Ahamed Fareed
MBBS, MD
Sri Jayewardenepura General Hospital.
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed