Main Menu

காலம் செய்த கோலம் -றிஹானா றஸீம் (தொடர்-1)

இந்த செய்தியைப் பகிர்க >>>

மணி ஆறாகியிட்டு. இன்னும் சற்று நேரத்தில மகன் ஆதில் வந்திடுவான் என தனக்குள் எண்ணியவாறு குசினிக்கும் வீட்டுக்கும் என இருந்த இரு குப்பி விளக்குகளைப் பற்ற வைத்து வாசற்படியில் உட்கார்ந்து ஆதில் வரும் திசையையே விழியால் வழியை நோக்கி அளந்து கொண்டிருந்தாள் தாய் ஸாறா.

ஸாறா ஏழு அங்கத்தவர்களைக் கொண்ட சந்தோஷம் நிறைந்த நடுத்தர குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. ஸாறாவுக்கு முதலாவதாக இருந்த சகோதரன் ஷரீப் இருபது வயதாக இருக்கும் போது கார் விபத்தொன்றில் வபாத்தானார்.

ஸாறாவை அடுத்து மூன்று சகோதரிகள். தன் சிறுவயதில் முதல் தான் ஒரு வைத்தியராக வர வேண்டுமென்ற இலட்சியம் கொண்டவள். பாடசாலையில் எதிலும் முதல் மாணவியாகவே திகழ்ந்தாள்.

இவளுடைய பெற்றோரும் கற்பித்த ஆசிரியர்களும் சக மாணவத்தோழர்களும் ஸாறா நிச்சயமாக ஒரு காலத்தில் உயர் தொழில் செய்வாள் என்று திடமாக எண்ணுமளவிற்கு படிப்பில் படு கெட்டிக்காரி.

ஆனால் “அவளின் வாழ்வில் விதி விளையாட அடியெடுத்து வைத்தது.

தொடரும்…

றிஹானா றஸீம்
பஹலகம
கெகிறாவ

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed