Main Menu

கட்டாரில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஸ்ரீலங்கா தாஃவா நிலையம்-கட்டார் (SLDC- QATAR)- ஏற்பாட்டில் இம்மாதம் (மார்ச் -2019) 15ம் திகதி வெள்ளிக்கிழமை கட்டாரில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு மற்றும் பல விஷேட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

“அல்குர்ஆன் எம்மோடு பேசுகிறது” எனும் கருப்பொருளில்…
தலைப்பு – “நபியும் அல்குர்ஆனும்”
இலங்கை-றாபிதத்து அஹ்லிஸ்ஸுன்னாஹ் அமைப்பினுடைய பணிப்பாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான *டாக்டர் அஷ்ஷேய்க் ரஈஸுத்தீன் (ஸரஈ)*
தலைப்பு – “அல்குர்ஆன்  ஒரு வாழும் அற்புதம்” 
SLDC-QATAR இனுடைய தாஃவாக்குழு உப தலைவர் *அஷ்ஷேய்க் ACK முஹம்மத் ரஹ்மானி*
தலைப்பு – “உறுதியான பாதைக்கு வழிகாட்டும் அல்குர்ஆன் “
தாருல் ஹுதா – பெண்கள் அரபுக்கலாசாலை விரிவுரையாளர் *அஷ்ஷேய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி)* ஆகியோரும் உரை நிகழ்த்தவிருக்கின்றார்கள்.
கட்டார் வாழ் தமிழ் பேசும் அனைத்து உறவுகளையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்போடு அழைப்பு விடுக்கிறது SLDC – கட்டார்.
இடம்:
BIN ZAID AUDITORIUM FANAR
காலம் & நேரம்:
15-Mar-2019 (6 pm – 9:30 pm).

அனைத்து மக்களுக்கும் நேர்வழியைக் காட்டும் பொருட்டு மிக இலகு நடையில் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது.

*அவர்கள் இந்தக்குர்ஆனை சிந்திக்கமாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்*. (4:82).
*இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?* (54:22)
*அவர்கள் இக்குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?* (47:24)

அல்குர்ஆன் பற்றி மேலும் பல போதனைகளை அறிந்து கொள்ள…… அல்குர்ஆன் எம்மோடு பேசுகிறது  எனும் மாநாட்டில் கலந்து பயன் பெறுவோம்…

ஏற்பாடு,
ஸ்ரீலங்கா தாஃவா சென்டர் -கட்டார் (SLDC-QATAR MEDIA UNIT)

Contact Details
MOHAMED RAMZIN (SLDC-QATAR MEDIA UNIT)
PHONE – +97477302291
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed