Main Menu

கொரோனாவும், நாத்தீகர்களின் கயமத்தனமும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

றிஸ்வி ஹுசைன் – வாழைச்சேனை

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோயான “கொரோனா” என்ற வைரஸ் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக உலக சுகாதார மையத்தின் ஆலோசனையின் பேரில் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றது. அதில் வணக்கஸ்தளங்களும் அடங்குகின்றது.

இதனைக் காரணமாக வைத்து சில நாத்தீக சிந்தனையாளர்கள் தமது விஷமக் கருத்துக்களை கேலிச்சித்திரமாகவும் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரந்து வருகிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் எப்போதுமே விஞ்ஞானத்திற்கெதிராக நின்ற ஓர் மார்கக்கமல்ல. எச்சந்தர்த்தப்பத்திலும் விஞ்ஞானத்தோடு ஒத்துச்செல்லும் தன்மை கொண்டது. இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இப்னு சீனா, இப்னுல் ஹைதம், இப்னுல் ருஷ்த் போன்ற விஞ்ஞானிகள் குர்ஆனின் அடிப்படையில் தமது விஞ்ஞானக் கருத்துக்களை முன்வைத்தவர்களாகும்.

இஸ்லாம் நோய்க்கு வைத்தியம் செய்தல், தொற்று நோயிலிருந்து பாதுகாப்புப்பெறல் போன்ற விடயங்களுக்கு தடை விதித்தது கிடையாது நோய் வராமல் தம்மைப் பாதுகாக்க சுத்தத்தை அதிகம் வலியுறுத்தும் ஓர் உண்ணத மார்க்கமாகும்.

பள்ளிவாயல்களுக்கு தொழுகைக்குச் செல்லாமல் இருப்பதால் மார்க்கத்தை முழுமையாக கழட்டி வைத்தவர்கள் என்ற அர்த்தம் கொள்வது தமது குறுகிய சிந்தனையின் வெளிப்பாடாகும்.

எனவே, நாம் இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து வீடுகளில் தமது வணக்க கிரிகைகளை மேற்கொண்டு, இதிலிருந்து விடுபட ஏக இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுவோம்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed