பாவங்களைத் தடுத்திடலாம் விரைந்திடு…!
இந்த செய்தியைப் பகிர்க >>>
பௌர்ணமி இரவில்
பொங்குகின்ற கடலோரம்
பொழியும் மழையாய்
செரிகின்றவர்களை
தடுத்திடலாம் விரைந்திடு!
கொட்டறை வாயில்களில்
கோடி கோடியாய்
நிற்கின்றவர்களை
தடுத்திடலாம் விரைந்திடு!
பாட்டுக் கச்சேரிகளுக்கு
செல்வதற்காய்
பல வழிகளிலும்
படை திரட்டுகின்றவனை
தடுத்திடலாம் விரைந்திடு!
பாவங்களையும் படைத்தவனையும்
மறந்து பாவிகளுக்காய்
பதில் சொல்பவனை
தடுத்திடலாம் விரைந்திடு!
இறை பாதையில்
குறை கொண்டு
தார் ஊற்றுபவனை
தடுத்திடலாம் விரைந்திடு!
பாவங்களைத் தடுத்திட்டு
படைத்தவனின்
அருள் பெற்றிடலாம் விரைந்திடு!
2018.06.23
யூ.எல்.எம்.நஸீம்
விடுகை வருடம்
தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி
ஓட்டமாவடி
இந்த செய்தியைப் பகிர்க >>>
Comments are Closed