Main Menu

நுட்பத்தின் இரண்டாமாண்டுப்பூர்த்தியும், “மனம் தொடும் மலர்கள்” நூல் வெளியீடும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

மீராவோடை யாஸீன்
கவிமணி கவிநுட்பம் பாயிஸா நௌபல் தலைமையில் இலங்கையில் இயங்கி வரும் நுட்பம் குழுமத்தின் இரண்டாவது ஆண்டுப்பூர்த்தி விழாவும், நுட்பம் குழுமம் கவிஞர்களின் தொகுப்பு மலரான “மனம் தொடும் மலர்கள்” நூல் வெளியீடும் இன்று 24.03.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு எல்லை வீதி மீராவோடையில் அமைந்துள்ள அந்நூர் இஸ்லாமிய கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஓய்வு நிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்தீன் கலந்து கொண்டார்.

அத்துடன், இலக்கிய அதிதியாக அல்ஹாஜ் பாவேந்தல் பாலமுனை பாரூக் (நுட்பம் குழும ஆலோசகர்) அவர்களும் குழும நிர்வாகிகள், கவிஞர்கள், ஆளுமைகள் எனப்பலரும் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு, இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி கவிஞர்களுக்கும் ஆளுமைகளுக்கும் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed