Main Menu

நுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கலும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

நுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கும் நிகழ்வுகளும் எதிர்வரும் 22.02.2020ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எல்லை வீதி, மீராவோடையில் அமைந்துள்ள அந்நூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நுட்பம் குழும நிறுவனரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான கவிமணி கவி நுட்பம் பாயிஷா நெளபல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு ச.நவநீதன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன், கெளரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ,ரீ,அமீஸ்டீம், சிறப்பதிதியாக கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும் இலக்கிய அதிதியாக பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நுட்பக்குழு நிருவாகத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed