Main Menu

விபத்தில் சாட்டோ வை.எல்.மன்சூர் காயம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கெப்ரக வாகனமொன்று மதிலுடன் மோதுண்டதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயம் சம்பவமொன்று கடந்த 01.07.2019ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடையில் வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப்ரக வாகனத்தை வீதிக்கு எடுக்கும் போது வீதியோரமாக இருந்த மதிலுடன் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வாகனத்தைச் செலுத்தியவரின் பதற்றத்தினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அதே மதிலோரம் நின்ற வாகன உரிமையாளர் வை.எல்.மன்சூர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



Comments are Closed