Main Menu

மீராவோடையில் ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எச்.எம்.எம்.பர்ஸான்)
இம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற மக்கா செல்லவுள்ளோர்களுக்காக ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கொன்றினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நடாத்தவுள்ளது.

மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இம்மாதம் (9) ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

புனித ஹஜ் கடமையினை எவ்வாறு மேற்கொள்வதென்பது வீடியோக்காட்சிகளுடன் குறித்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளதால், இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஆண், பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு
077 93 57 420

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed