Main Menu

தற்கொலைத்தாக்குதல் இடம்பெற்ற சாய்ந்தமருது வீட்டைத் திருத்தம் செய்யவில்லை -இராணுவம் மறுப்பு

பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தரப்பு ஈடுபட்டுள்ளதென்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை (6) காலை குறித்த பகுதிக்குச்சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் பகுதிகளைப் புகைப்படமெடுத்ததுடன், அதனை மீளமைப்பதற்கான உத்தேச வரைவொன்றினையும் செயற்படுத்தி துரித கதியில் பழைய நிலைக்கு அவ்வீட்டைத் திருத்தியமைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், இந்த வீட்டை இராணுவத்தினர் வெளியிடங்களிலிருந்து வந்தவர்களுக்கு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான வீடென்பதைக் காட்டுவதற்காகவே அழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாய்ந்தமருது வீட்டுத்தொகுதியில் ஷஹ்ரானின் குடும்பத்தினர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட வேளை, ஷஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) மற்றும் மகள் ருஸையா ஆகியோர் இருபது நிமிடங்கள் மலசல கூடத்தில் ஒழிந்திருந்தமையாலே உயிர் தப்பியதாக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த ஸஹ்ரானின் மனைவி, மகள் ஆகியோரை இராணுவத்தினரே மீட்டு வைத்திய சிகிச்சை மேற்கொண்டமை ஊடகங்களில் வைரலானமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சில ஊடகங்களில் இராணுவத்தினர் மேற்குறித்த வீட்டைத் திருத்தியமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக வெளிவந்துள்ள செய்தியை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed