Main Menu

“காலம் செய்த கோலம்” -றிஹானா றஸீம் (தொடர் -2)

இந்த செய்தியைப் பகிர்க >>>

றிஹானா றஸீம்
க.பொ.த சாதாரண தரம் வரை படித்து நல்ல பெறுபேறுகளைப் பெற்று தன் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் தேடித்தந்த பெருமையப்பற்றிக் கதைக்காதோர் அவ்வூரில் யாருமிலர் எனலாம்.

அவளும் உயர் கல்வியைத்தொடர எத்தனிக்கும் போது தான் பொருளாதாரம் அவளின் குடும்பத்தினரின் கையைக் கடிக்க ஆரம்பித்தது.

தற்போது ஸாறா ஒரு வைத்தியராக வர வேண்டுமென ஆசை இருந்தாலும், தன் குடும்ப கஷ்டங்களையும் தன் உடன் பிறந்த சகோதரிகளையும் எண்ணி விட மறக்கவில்லை.

குடும்பக்கஷ்டத்தை கருத்திற்கொண்டு எந்தக்காலத்திலும் கல்வியைத்தொடர்வது கஷ்டமான விடயம் என்று எண்ணி வேதனையை விலையில்லாமல் அனுபவித்தாள்.

தனது கனவை கலைத்து விட்டு குடும்பக்கஷ்டங்களையும் அவளின் கஷ்டங்களையும் நினைத்து இரவு பகலாக அழுது கொண்டு தனக்கே ஆறுதல் படுத்திக் கொண்டாள்.

இப்படி சில நாட்கள் நகர்கையில் தன் வாப்பாவின் வாக்கை மீறாமலும் கஷ்டத்தை மனதில் வைத்து பக்கத்து கிராம தோட்டமொன்றில் வேலை செய்யும் நல்ல உழைப்பாளியும், நல்லொழுக்கமுமிக்க அன்வருக்கு வாழ்க்கைப்பட்டாள்.

அன்வரும் ஸாறாக்கேற்ற கணவனாய் வாய்த்தான். தன் உழைபில் அவளின் தேவைகளனைத்தையும் செய்து கொடுத்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

ஸாறா என்னதான் சந்தோஷமாக இருந்தாலும், அவ்வப்போது தன்னை என்னி வருந்தாமலும் இல்லை. இவ்வாறு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கையில் தான் அழகான ஓர் ஆண் குழந்தை பிறகிறது.

தொடரும்…..

றிஹானா றஸீம்
பஹலகம
கெகிறாவ

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed