Main Menu

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.ரீ.எம்.பாரிஸ்
மட்டக்களப்பு – மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் பிரதான புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று 12.08.2019ம் திகதி திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

பள்ளிவாயலின் பேஷ் இமாம் எம்.யூ.எம். பசீர் அஸ்ஹரி பெருநாள் தொழுகையையும் குத்பா பேருரை நிகழ்த்தினார்.

இதன் போது நாட்டில் நிலையான சமாதானம், அமைதி நிலவ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

மிக நீண்ட கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இப்பள்ளிவாயிலுக்கு இம்முறை பெருநாள் தொழுகையில் ஆண்களும், பெண்கள் என குடும்ப சகிதம் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed