Main Menu

மானிட வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஹஜ் பெருநாள் ஆரம்பித்து வைக்கிறது – வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் -எம்.ரீ.எம் அன்வர்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.ரீ.எம்.பாரிஸ்

நபி இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் செய்த தியாகத்தை நினைவூட்டுமுகமாக இறைவன் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கின்ற இரு பெருநாள் தினங்களில் ஹஜ்ஜுப்பெருநாள் தனித்துவம் பெறுகிறது.

அந்த வகையில், ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அறநெறி ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி வாழ்வதுடன், அண்டை வீட்டாருடனும் ஏனைய சகோதர இனத்தவர்களும் நல்லுறவுடன் வாழ்வதற்கும் மேலும் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றது.

இதனைப்புரிந்து கொள்ளாத பலர் அதற்கு மாற்றமாக வாழ்வதனை நம்மால் அவதானிக்க முடிகிறது.

சக வாழ்வினை வலியுறுத்தும் இஸ்லாம் விட்டுக்கொடுப்பு, தியாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தி ஒரு மனிதனை நல்வழிப்படுத்துவதுடன் நேரான வழியில் பயணிக்க வழி காட்டுகிறது.

ஒரு முஸ்லிமின் உயரிய நோக்கம் அவன் இறுதியில் சுவனத்தை அடைய வேண்டும் என்பதேயாகும். அந்த வகையில், மானிட வாழ்வில் ஒவ்வொரு முறையும் புதிய அத்தியாயத்தை ஹஜ் பெருநாள் ஆரம்பித்து வைத்திருக்கின்றது.

இந்த மகிழ்ச்சிகரமான நன்னாளில் என் இனிய இஸ்லாமிய உறவுகளிடத்தில் பெருநாள் வாழ்த்துச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதமடைகின்றேன் என கோறளைப்பற்று மேற்கு ஓட் டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ரீ.எம் அன்வர் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed