Main Menu

நல்லுதாரணங்களைக்கொண்டு சகவாழ்வினைக் கட்டியொழுப்புவோம் – கல்குடா மீடியா போரம் ஹஜ் பெருநாள் வாழ்த்து

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களிடத்தில் அன்பையும் நல்லொழுக்கங்களையும் போதிக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கம் ஏனைய சமயத்தவர்களின் சமய, கலாசார விழுமியங்களை மதித்து
பல தரப்பட்ட மக்களிடையே சகோதரத்துவ உறவுடன் வாழ்வதற்கு வழி காட்டுகிறது.

உலகில் தோன்றிய சமயங்கள் யாவும் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக பல்வேறு போதனைகளை எமக்கு வழங்கியிருக்கின்ற நிலையில், அப்போதனைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கத் தவறிய மனிதர்களாலேயே உலகில் பல்வேறு கோணத்தில் சமயத்தின், இனத்தின், மொழியின் பெயரால் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன

இவ்வாறான வீண் தர்க்கங்களையும் சர்ச்சைகளையும் புறந்தள்ளி மனித நேயத்துடன் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் மூலம் நற்சமூகமொன்றை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவுடன் வாழ வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நல்ல உதாரணங்களைக் கொண்டு நல்ல மனிதர்களாய் சக வாழ்வினைக் கட்டியெழுப்ப முன்வருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம் என கல்குடா மீடியா போரத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் இன்று 12.08.2019ம் திகதி விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed