Main Menu

முன்மாதிரியாக வாழ்ந்து, மறுமையில் வெற்றி பெறுவோம் – பெருநாள் வாழ்த்தில் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எச்.எம்.எம்.பர்ஸான்)
தியாகத்தை நினைவு கூரும் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்களின் உளக்கவலைகள் நீங்கி, ஒற்றுமையுடன் இஸ்லாமிய வழிமுறையில் நிம்மதியாக வாழ்வதற்கு படைத்த இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்து நாமனைவரும் நிம்மதியாக வாழ கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும். அத்தோடு, நாமனைவரும் இறைவன் பக்கம் மீண்டு பிரார்த்திக்க வேண்டும். எமது நாட்டில் முன்மாதிரியான சமூகமாக இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றி வாழ்ந்து மற்றவர்களையும் வாழச்செய்து மறுமையில் ஈடேற்றம் பெறுவதற்கு நாமனைவரும் முயற்சிக்க வேண்டும்.

இறைதூதர் இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அரப்பணிப்பையும் உறுதியையும் நினைவுகூரும் திருநாளாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் அமைகிறது. அத்தியாகவுணர்வை நினைவில் நிறுத்தி எமது அன்றாடச் செயற்பாடுகளைச் சீர்செய்து கொள்ள எல்லாம் வல்ல இறைவன் எம்மனைவருக்கும் அருள் புரிய வேண்டும் எனக்கூறி அனைத்து ஈமானிய நெஞ்சங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed