Main Menu

செம்மண்ணோடை அல் ஹம்றா வரலாற்றுச்சாதனை

எம்.ஐ.அமீர்
இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் இருபது மாணவ, மாணவிகள் சித்தி பெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர்.

மிக விரைவில் நாற்பதாண்டு பூர்த்தியைக் கொண்டாடவுள்ள செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய வரலாற்றில் இம்முறையே அதிகளவு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் காணப்படும் இப்பாடசாலையின் அடைவு மட்டத்தை உயர்த்துவதுவதில் பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.சுபைதீன் அவர்களும் பாடசாலையின் ஆசிரிய, ஆசிரியைகளும், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கங்களும் அர்ப்பணிப்புடன் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த அடைவினைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஏ.எல்.எம்.சனூஸ் ஆசிரியரின் பங்களிப்பு அளப்பெரியது. ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியே இந்த வரலாற்றுச்சாதனையாகும்.

இந்த அடைவினைப் பெற்றுக்கொள்வதில் அர்ப்பணிப்புடன் இரவு, பகல் பாராது கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட சனூஸ் ஆசிரியருக்கும் சிறப்பான வழி நடாத்தலை வழங்கிக் கொண்டிருக்கும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.சுபைதீன் அவர்களுக்கும் மற்றும் பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Jf.Reesa 177
Al.Abdulla 175
Mnf.Naseeha 173
Sif.Thaseefa 171
Sf.Amani 166
Alm.Aakib 163
Nm.nasim 162
Mf. Minha 162
Slm.Atheeb 161
Bm.Nathik 159
Mrf.Sakoora 159
Jf.Juhaisa 158
Ff.Saja 158
Nm.Hatheeb 157
Msm.Sajith 157
Ms.Rana 157
H.Aathik 155
Mf.Nasitha 153
Fm.Askan 152
Ua.Ammara 152



Comments are Closed