Main Menu

ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு இராஜாங்க அமைச்சர் மௌலானா 59 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு

எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஆரம்பக்கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவினால் கல்குடாப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் ஓரங்கமாக ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலைக்கு) நுழைவாயில் அமைப்பதற்காக 59 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு கலாசார பிரதிபலிப்புக்களுடன் கூடிய நுழைவாயில் அமைப்பதற்காக 59இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

கல்குடாப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சார்பில் வட்டாரப் பிரதிநிதியான எம்.ரீ.எம்.அன்வர் (விஜிதா) மற்றும் கட்சியின் பிரதேச முக்கியஸ்த்தர்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய குறித்த நிதியொக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணங்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவினால் பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஷ்ஹாக் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் , கட்சி முக்கியஸ்த்தர்கள், அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு காரணகர்த்தாவாக அமைந்தவர் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா என்பதுடன், பல்வேறு அபிவிருத்திப்பணிகள் அங்கு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed