Main Menu

கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: மஜ்மா நகர் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் கை, கால் எழும்புகள் உடைந்த நிலையில் இளைஞனொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதியில் நாவலடி எனுமிடத்தில் இவ்விபத்து இன்று (9) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கறைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கார், மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞனுக்கு கை, கால் உட்பட பல பகுதிகளிலும் எழும்புகள் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் காயப்பட்ட இளைஞன் தொழிநுட்பக்கல்லூரியில் கல்வி கற்கும் மஜ்மா நகரைச் சேர்ந்தவர் எனத்தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Comments are Closed