Main Menu

ரிதிதென்னை விபத்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதி ரிதிதென்னைப் பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வெலிக்கந்தை கறுப்பளை முத்துகல்லைச்சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள தமது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்வையிடச்சென்ற போது வாழைச்சேனையிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற வான் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபரை மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உடற்கூற்று ஆய்வின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் போது வான் மற்றும் சாரதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தனர்.



Comments are Closed