Main Menu

ஒரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த மூவர் விபத்தில் காயம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)
மோட்டார் சைக்கிளொன்றில் அதி வேகமாகப்பயணித்த மூவர் மதிலில் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (20) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை சந்தை வீதியிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,

மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் ஓட்டமாவடிப் பகுதிலிருந்து மீராவோடை நோக்கி குறித்த வீதியால் அதிவேகமாகப் பயணித்த சமயம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மதிலில் மோதுண்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் தலைக்கவசமின்றி போக்குவரத்து விதிகளை மீறி பயணித்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞனுக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Comments are Closed