Main Menu

முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிமின் ‘நான் எய்த அம்புகள்’ வெளியீட்டு விழா

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எம்.என்.எம்.அப்ராஸ்)
சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப்பேரவையின் பூரண அனுசரணையில் லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பு மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து வெளியிடும் முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய ‘நான் எய்த அம்புகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 11.01.2020ம் திகதி சனிக்கிழமை காலை 9.10 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன்
மண்டபத்தில் இன நல்லுறவிக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் ஹஜ் குழு உறுப்பினர் அஹ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், மற்றும் அரசியல் பிரமுகர்கள், கலை, இலக்கியவாதிகள், கல்விமான்கள், வர்த்தகப்பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed