Main Menu

கல்குடா முஸ்லிம்களின் கனவை இரு கட்சியினரும் குழி தோண்டிப் புதைத்தனர் – உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மட் காட்டம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

கல்குடாவின் தாகத்திற்கு 15 வருடங்களுக்குள் பல பொன்னான சந்தர்ப்பங்கள் கிடைத்தும், அதனை தங்களது அரசியல் ஆதாயத்துக்காக குழி தோண்டிப்புதைத்த பெருமை இரு முஸ்லிம் கட்சியும் இம்மண்ணின் மைந்தன் என்று சொல்லி மக்களை ஏமாற்றியவர்களையே சாரும். இரு சாராரும் காலா காலமாக ஓட்டி வந்த துரும்புச்சீட்டானது, கேள்விக்குறியாகிப்போனது என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை தெரிவித்துள்ளார்.

எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பல பிரதேசங்களில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் புரையோடிக்காணப்படுகிறது. அரசியல் திருப்புமுனை இவ்வாறு அமையுமென்று இவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒன்றாய்ப்பயணித்து ஒன்றுமே இல்லாமல் நிர்க்கதியாக நிற்கும் நிலைக்கு வித்திட்டவர்கள் இவர்களே.

ஒட்டு மொத்த சமூகத்தையும் தங்களது நலனுக்காக தாரை வார்த்துக் கொடுத்து விட்ட துரோகத்தனம். தங்களது நலன்களுக்காக பிரிந்தவர்கள் தங்களது நலன்களுக்காகவே ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் நிதர்சனம். எந்தக்கட்சிக்காக ஒன்றாய்ப் பயணித்தார்களோ, அந்தக்கட்சியே அவர்களை தூக்கியெறியும் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

இரு கட்சிகளும் எப்படியெல்லாம் சண்டை பிடித்தது முரண்பாடு கொண்டது. ஆதரவாளர்களை கட்சிதமாக பிரித்தாண்டது. பாவம் அப்பாவி ஆதரவாளர்களும் கட்சிப்போராளிகளும். இவர்கள் எம் சமூகத்தை நேசித்தார்களா? அழிவின் விளிம்பில் கொண்டு சேர்த்தார்களா? என்பதற்கு பல சம்பவங்கள் எங்களுக்கு பாடமாக அமைந்தது.

19வது திருத்தச்சட்டத்தின் பாதகம், அபாயம் தெரிந்தும் ஆதரவு தெரிவித்து விட்டு இப்போது வந்து நாங்கள் அன்று அதற்கு ஆதரவு தெரிவித்து பெரும் தவறைச்செய்து விட்டோம் என நீலிக்கண்ணீர் வடித்து என்ன பயன்? இலங்கை முஸ்லிம்களை ஒரே கூரையின் கீழ் வழி நடாத்துவதற்கான வகிபாகம், தலைமைத்துவம் அரசியலுக்கப்பால் தோற்றுவிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.

அது இலங்கை முஸ்லிம்களின் அரசியலையும் தீர்மானிக்கும் ஒரு வலுவான இந்நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய வழிகாட்டியாக அமைய வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.

இவற்றுக்கான மாற்றத்தை ஏற்படுத்தாதவரை முஸ்லிம்களின் எதிர்கால நிகழ்வுகளை யாராலும் காப்பாற்றவே முடியாது போய் விடும். நான் சொல்ல வந்த விடயம் எமது கல்குடாவின் தாகம் பொதுஜன பெரமுன ஆளும் கட்சியினூடக தீர்த்து வைக்கப்படுமெனும் நம்பிக்கையை எனக்கு தந்த இறைவனுக்கே புகழனைத்தும். அவை நிறைவேற உங்களது பிரார்த்தனைகளிலும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed